பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு
அன்பினிய நண்பர்களே,
சென்ற மாத (செப்டம்பர், 2015) பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டியில் திரு சிவானந்தம் கனகராஜ் அவர்களின் இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள் குறித்த கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நடுவர் திரு ஐயப்பன் அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் நண்பரே.
தொடர்ந்து போட்டிக்கான ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வரவேற்கிறோம். நன்றி.