எ(வ)ண்ணச் சிதறல்கள்

4

ஸ்ரீராம்

 

முதுமை

முதியவர்கள் ..

கால ஆலைகள் அரைத்து துப்பிய கரும்பு சக்கைகள்

..

பாவம் இளைஞர்களுக்கு தெரியாது

சக்கைகள் கூட காகிதமாகி

நாளைய வரலாறை

எழுதும் என்று 

மனம்

என் மனது

…தொங்கு பாலம் போல..

நீ ந(க)டந்து போன பின்பும்

உன் நினைவுகளின் கனத்தால்

ஆடிக்கொண்டே இருக்கிற்து

… 

என் மனது

வேடந்தாங்கல் மரம் போல

..

பல பறவைகள் கடந்து போகும்

..

சில அமர்ந்து இளைப்பாறி போகும்

..

ஒன்றிரண்டு மட்டுமே

என்

மனக்கிளைகளில் கூடு கட்டிக் கொள்ளும்

..

அவையும் பறந்து போன பின்

..

கூட்டின் மிச்சமும்

..

உதிர்ந்த சிறகுகளும்

இருக்கும்

..நினைவின் சின்னமாய் ..

நீ போன பின் உன் நினைவுகள் இருக்கிறதே

..

அது போல

..

என் இதயம்

..

உன் பெயரை சொல்லித்தான்

..துடித்துக் கொண்டிருக்கிற்து ..

இல்லை

..இல்லை..

உன் பெயரை சொல்வதால் தான் என் இதயம்

இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது

..

நட்பு

 

தமிழ் வானில் சிதறிய

விண்மீன்களாய் சொற்கள்

..

சேர்த்து எழுதினால் கவிதை

..

ப்ரபஞ்சத்தின் பல திசைகளில்

இருக்கும் அன்பு உள்ளங்களை

அன்பால் இணைத்தால்

அது

“நட்பு”..

ஆம்

..நட்பு கூட இனிய கவிதைதானே.. 

இனிய நட்பென்றால் நினைவுக்கு வருவது

..

உன் பெயர்தான்

..

உன் பெயர்

.. எனக்கு இனிமையாய் ஆனதே

அந்த நட்பால் தான்

..

வானத்துப் பறவைக்கு

..

சிறகுகள் நட்பாகும்

..

நட்பு சிறகிருந்தால்

வானமும் வசமாகும்

.. 

நாம் பேசிய தருணங்கள்

..

இனிய நட்புக்கு சாட்சியாகும்

..

நம் நட்புக்கு சாட்சியான தருணங்கள்

வாழ்வின் இனிய நிமிடங்கள் ஆகும்

..

என் நினைவாக

..

உன்னிடம் ஒன்றுமில்லை

..

ஆனால்

..

என்னிடம்

.. உன் நினைவைத்

தவிர வேறு ஒன்றுமில்லை

..

எனக்குப் பிடித்த

மழை

..

நிலா

..

கவிதை

..

எல்லாம் உனக்கும் பிடிக்கும்

..

என்பது எனக்குத் தெரியும்

..

உனக்கு என்னை பிடிக்குமா

..

என்பதைத் தவிர

 

 

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “எ(வ)ண்ணச் சிதறல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.