ஸ்ரீ ராமதாசர் 3
விசாலம்
நான் முன்பு சென்னையில் கருமாரி கூடம் போயிருந்த போது திரு விசுவநாதன் என்பவர் வந்திருந்தார் . திரு ராமதாசர் அவர்கள் குறி சொல்லும் இடத்தில் அமர்ந்ததும் அந்த விசுவநாதன் என்பவரும் ஆண்கள் அமரும் பகுதியில் அமர்ந்திருக்க கூடவே மிகவும் களையான அழகான சிறு பையனும் அமர்ந்திருந்தான். திடீரென்று அம்மனாகவே மாறிய திரு ராமதாஸ் சுவாமிகள் அந்த சிறு பையனை தன் அருகே அழைத்தார் அவனும் மிகவும் பவ்யமாக வந்து அவர் முன் அமர கூடவே அவனது தந்தையும் வந்து அமர்ந்தார்
“என்ன மகனே ஆனந்த் . சதுரங்க ஆட்டத்தில் மிகத் தேர்ச்சியாகப் போகிறாயா ! நீ உலக சாதனை புரிந்து சிறந்த இடத்தைப் பிடிப்பாய் பெரிய புகழுமடைவாய் .இந்தா பிடி சாம்பல் .எப்போதும் உன் கூடவே இது இருக்கட்டும் ” என்றபடி வேப்பிலைக் கொத்தினால் உடலெல்லாம் தடவி விட பின் அவன் கை நிறைய சாம்பலை அள்ளித் தந்தாள்.
அந்த தேவி சொன்னபடி இன்று சதுரங்கப் போட்டியில் உலக வீரராக விளையாடி அசத்தி வரும் திரு ஆனந்த விசுவநாத் கருமாரியிடம் மிகவும் பக்தி கொண்டவர் .அவர் அப்பா மகனின் சதுரங்கப் போட்டி எப்போது வந்தாலும் கருமாரி அன்னையிடம் வந்து சுவாமி ராமதாசரிடமிருந்து அருள் வாக்கு கேட்டுப் பின் சாம்பலும் வாங்கிச் செல்வார்
ஒரு தடவை அவர் தம் அருள் வாக்கில் “ஆனந்த் எப்போது நீ விளையாடும் போதும் மிக இக்கட்டான கட்டம் வந்தால் உடனே என்னை நினைத்துக் கொள். நான் வந்து உனக்கு உதவி செய்வேன். வெற்றியே கிட்டும் உனக்கு ” என்றாள் ..அந்த நேரமும் வர ஆனந்த அம்மனை நினைத்து விளையாட ‘முதல் இந்திய கிராண்ட் மாஸ்டர் ‘ என்ற பட்டமும் கிடைத்தது இதன் பின் இவருக்கு சிறந்த விருதாகிய ‘அர்ஜுன் விருதும் பின் ‘பத்ம பூஷன் என்ற பட்டமும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெறும் பாக்கியம் கிட்டியது அன்னையின் வாக்கினால் இன்று வரை வெற்றியை நோக்கியே வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீ தேவி கருமாரியம்மனின் திருச்சாம்பலை சுவாமி ராமதாசரின் கையினால் அருள்பெற்று திட நம்பிக்கையுடன் பக்தியுடன் முறையாக உபயோகித்தவர்கள் அம்மனின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர்கள் எனலாம்
1987ம் ஆண்டு இவர் பரமாச்சார்யார்களைப் பார்க்க ஹைதராபாத்திற்கு காரில் சென்றார் ஆனால் போகும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டு அதில் காயம் ஏற்பட்டு அவர் தாடை முழுவதும் இறங்கி வைத்தியம் செய்யும்படியாக ஆகிவிட்டது
மருத்துவமனையில் இருந்த சில நாட்களிலும் அவர் மனம் முழுவதும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலைச் சிறப்பித்து கும்பாபிஷேகம் நடத்தும் நிலையிலேயே இருந்தது . .முழுவதும் சரியாவதற்கு முன்பே கோயிலுக்கு அலைய ஆரம்பித்தார் .
2000ம் ஆண்டின் போது இவர் உடலின் சக்தி இழந்து மெலிந்து காணப்பட்டார் .பின் முழு மருத்துவ பரிசோதனை செய்ததில் இவருக்கு மஞ்சள் காமலை என்று தெரிய வந்தது . அத்துடன் எப்படியும் கும்பாபிஷேகம் செய்ய அலைந்ததில் உடல் நிலை மேலும் குன்றியது கும்பாபிஷேகம் ஜூன் மாதம் நல்லபடி நடக்க பின் ஆகஸ்டு மாதம் கோகுலாஷ்டமி அன்று காலமானார் இவர் கடைசி ஆசை கருமாரி ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்க வேண்டும் என்பதே. இவருக்கு சுவாமி தயானந்த சரசுவதி, மயிலை குருஜி போன்ற மகானகள் மிக நெருக்கமானவர்கள்
இவருடைய பக்தர் திரு குப்புஸ்வாமி என்பவருக்கு கனவில் கருமாரியம்மன் தோன்றி சுவமி ராமதாசர் சாம்பல் கொடுத்து அருள் சொல்லிய இடத்தில் திருவேற்காட்டில் தியான மண்டபம் கட்டும் பணியை ஒப்படை.த்தாளாம்.அதேபோல் திரு குப்புஸ்வாமி மிக அழகான தியான மண்டபம் ஒன்றைக் கட்டியிருக்கிறார்
இவர் கடைசியில் சொன்ன வார்த்தைகள் “அம்மா என் பணி இத்துடன் போதுமம்மா என்னை அழைத்துக்கொள்’ இந்த வேண்டுகோளிலிருந்து அவர் மஞ்சள் காமாலை வேதனையால் எத்தனைச் சிரமப்பட்டிருப்பார் என்று புரிகிறது
இவருடைய சமாதி கருமாரியம்மன் கோயிலின் அருகிலேயே இவருடைய விருப்பப்படி தம் குரு சுவாமி நடேசரின் சமாதிக்கு அருகிலேயே கட்டப் பட்டிருக்கிறது அங்கு போய் அமர கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் வர்ணிக்க முடியாத ஒன்று .