சமையல் கலை
திருமதி.வசந்தா குகேசன்
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி – 1 ஆழாக்கு
பால் – 1 லிட்டர்
ஏலக்காய் – 4
குங்குமப்பூ – 1 சிட்டிகை
சக்கரை – 200 கிராம்
பாதாம் பருப்பு – சிறிதளவு
முந்திரிப் பருப்பு – சிறிதளவு
செய்முறை :
1) பச்சை அரிசியை கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
2) லேசான ஈரத்துடன் அரிசியை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
3) அந்த மாவை வாணலியில் இட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
4) தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக நீள வாக்கில் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
5) அதனை ஆவியில் (இட்லி தட்டில்) அரை வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்.
6) பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் பாதாம், முந்திரி மற்றும் ஏலம் மூன்றையும் அரைத்துப் போட்டு பால் பாதி அளவிற்கு வரும் வரை சுண்டக் காய்ச்சவும். சக்கரையும், சேர்க்கவும்.
7) இறுதியாக வேக வைத்த கொழுக்கட்டைகளை பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும்.
8) குங்குமப்பூ தூவி இறக்கவும்.
குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்தால் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.