எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் மகளிர் விழிப்புணர்வு முகாம் – செய்திகள்
சென்னிமலை எம். பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம் மற்றும் ஈரோடு இன்னர் வீல் கிளப் ஆகியோர் சார்பில், 02 ஆக 2011 அன்று கல்லூரியின் பெண் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கான மகளிர் நல விழிப்புணர்வு முகாம் கல்லூரி சுத்தானந்தன் அரங்கில் நடைபெற்றது. இம்முகாமிற்கு கல்லூரியின் தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கி மாணவிகள் தங்களது படிப்பறிவினைக் கொண்டு சமூக சேவைகளிலும் ஈடுபடவேண்டும் எனக் கூறி சிறப்புரையாற்றினார். ஈரோடு இன்னர் வீல் கிளப்பில் தலைவர் த. சுமதி அவர்கள் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் சிறப்பு விருந்தினராக டாக்டர். ஆர். பிரபா ரகு அவர்கள் கலந்துகொண்டு கர்பிணிப் பெண்கள், அவர்கள் குழந்தைகளின் நலம் பேணுதல் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் கல்லூரியின் அனைத்துத் துறைப் பெண் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.