Author Archives: கேப்டன் கணேஷ்

கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – செய்திகள்

டிசம்பர் 9, 2011.  கொல்கத்தா. கொல்கத்தாவின் புகழ்பெற்ற AMRI மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 03:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கட்டடம் முழுவதும் நச்சுப் புகை பரவியதால், 70க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 3 மருத்துவமனை ஊழியர்களும் இறந்தனர். இறந்தவர்களின் பெரும்பாலோனோர் படுக்கையை விட்டு எழ முடியாதவர்கள் மற்றும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.  மருத்துவமனையில் இருந்த மற்றவர்களால் ஒரு சில நோயாளிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. தீ பரவத் தொடங்கியவுடன் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஓடிவிட்டதாகவும், மருத்துவமனையின் அனைத்துக் கதவுகளும் பூட்டப்பட்டதாகவும், ...

Read More »

உலக சாதனை படைத்த சேவாக் – கிரிகெட் செய்திகள்

இந்தோர். டிசம்பர் 8.  இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையேயான சர்வதேச ஒரு நாள் போட்டி இந்தோரில் நடைபெறுகின்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.  மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்த இந்திய அணி இப்போட்டியில் வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் களம் இறங்கியது.  வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.   இந்த இந்திய இணை பவுண்டரிகளை விளாசித் தள்ளியது.  இந்திய அணி மொத்தம் 176 ஓட்டங்கள் என்ற நிலையில், 67 ஓட்டங்கள் ...

Read More »

காளான் வளர்ப்பு இலவசப் பயிற்சி – செய்திகள்

சக்தி has invited you to the event ‘காளான் வளர்ப்பு இலவச பயிற்சி’ on விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்! மதுரை.  மதுரையில் இயங்கிவரும் ரூட்செட் பயிற்சி நிறுவனத்தில், காளான் வளர்ப்பு இலவச பயிற்சி டிசம்பர் 11 அன்று நடத்தப்பட உள்ளது.  கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளையும் இணைந்து வழங்குகின்றன.  பயிற்சி பெற விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி   ரூட்செட் பயிற்சி நிலையம், பெருங்குடி, விமானநிலைய சாலை, மதுரை ...

Read More »

ராஜயோகம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் உபயோகமான நிகழ்ச்சி “ராஜ யோகம்”. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியின் படி அமையப் பெற்றதுதான் மனித வாழ்க்கை.  இப்பிறப்பில் நம்மால் முடிந்த நல்லவற்றை இயலாதோர்க்கும், இல்லாதோர்க்கும் செய்தால் இப்புண்ணியம் தொடரும் பிறப்புகளின் நம்மை நற்கதி அடையவைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரபல ஜோதிட நிபுணர் முனைவர் கே. ராம் அவர்கள் கலந்துகொண்டு தொலைபேசி மூலம் நேயர்கள் தங்களது ...

Read More »

சுப உதயம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை வேளையில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது. காலை 05:00 மணிக்கு தொடங்கி 08:30 மணி வரை பல்வேறு புதிய அம்சங்களுடன் ஒளிபரப்பாகிசரும் இந்நிகழ்ச்சியில் 5 மணிக்கு பஜனையும், 05:30 க்கு ராக நமனமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு சுப்ரபாதமும் இடம்பெறுகிறது.  இதன் முத்தாய்ப்பாய் 06:30 மணிக்கு பிரபல உபன்யாசகர் வழங்கும் நாராயணியம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து யோகாவும் இடம்பெறுகின்றன. சுப உதயம் நிகழ்ச்சியில் 7 மணிக்கு பல்வேறு பக்தி நிகழ்வுகளின் தொகுப்பான பக்தி சிஞ்சனா ...

Read More »

சுனாமி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி – செய்திகள்

சென்னை. நவம்பர் 29,2011. சுனாமி பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜப்பானிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தனது குழுவினருடன் இணைந்து பாடினார். ஜப்பானில் சில மாதங்களுக்கு முன் சுனாமி பேரலைகள் ஏற்பட்டு லட்சக்கணக்கான ஜப்பானிய மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.  இவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எஸ்தெல் ரிசார்ட் மற்றும் ப்ரிட்டோஸ் அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தமிழ் திரைப்பட ...

Read More »

நிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ்

கேப்டன் கணேஷ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு.  அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்தவர் யார் தெரியுமா?  மார்கோனி கம்பியில்லாத் தகவல் தொடர்பை கண்டுபிடிப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அதைக் கண்டறிந்தும், புகழ் விரும்பாமல் அடக்கமாய் இருந்தவர் யார் தெரியுமா? இன்று அவருக்கு 153 வது பிறந்த நாள்.  அவர் தான் ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ். ஆச்சார்ய சர் ஜகதீச சந்திர போஸ் 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் மைமேன்சிங் மாவட்டம் விக்ராம்பூர் என்ற ஊரில் (தற்போது பங்களாதேஷ் ...

Read More »

உயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள்

01 டிசம்பர் 2011 அன்று உயிர்மை பதிப்பகம் ‘ஒரு மாலையின் இரண்டு நிகழ்வுகள்’ என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது.  உயிர்மை 100வது இதழின் வெளியீட்டு விழா மற்றும் சீனு ராமசாமியின் ‘காற்றால் நடந்தேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா. இடம் : தேவ நேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை – 2. நேரம் : மாலை 6:00 மணி. விழா பற்றிய தகவல்களுக்கு : 044 – 24993448,  [email protected]     

Read More »

கந்தபுராணம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

வள்ளல் வடிவேல் முருகனின் அருமை பெருமைகளை, அழகுத் தமிழில் பிரபல உபன்யாசகர்  லட்சுமி ராஜரத்தினம் வழங்கும் பக்தி நிகழ்ச்சி கந்தபுராணம்.  ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சிறு சிறு பாடல்களும் இடம்பெறுவதால் கந்தபுராணம் நேயர்களின் பக்தி உணர்வை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. அறுபடை வீடுகளில் குடிகொண்டு அருளாட்சி புரியும் முருகப் பெருமானின் அவதார பெருமைகளையும் அற்புத திருவிளையாடல்களையும் பல்வேறு கிளைக் கதைகளுடன் தனக்கே உரித்தான ...

Read More »

பாலை திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் – சீமான் வேண்டுகோள் – செய்திகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பான, தமிழ்நாட்டு வரலாற்றை விவரிக்கும் “பாலை” திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் என நாம் தமிழர் கட்சி அறிவிப்பு விடுத்துள்ளது. இப்படம் வெளியாகப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டு படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன் ஊடகங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  அக்கடிதம் கண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், இயக்குநர் செந்தமிழனுடன் கைபேசியில் பேசினார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறிய இயக்குநர் சீமான், நாம் தமிழர் கட்சியின் இணையதளத்தில் இப்படத்தை வெற்றிபெறச் செய்யவேண்டியது தமிழர்களின் கடமை என்ற ...

Read More »

பலாத்காரத்தில் ஈடுபட்ட காவல் துறை – செய்திகள்

26 நவம்பர் 2011.  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் சரகத்திற்குட்பட்ட டி. மண்டபம் கிராமம், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த காசி என்பவரை திருட்டுக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு திருக்கோவிலூர் காவல்நிலையத்தைச் சார்ந்தவர்கள் நவம்பர் 22 அன்று பிடித்துச் சென்றுள்ளனர்.  காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காசியை விடுவிக்குமாறு அவருடைய தாயார் வள்ளி காவல் நிலையத்தில் வேண்டியுள்ளார்.  அவரிடம், மற்ற நெருங்கிய உறவினர்களை அழைத்து வந்தால் விசாரணை செய்து விட்டு அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு வள்ளி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் ...

Read More »

கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது தில்லி உயர்நீதி மன்றம் – செய்திகள்

28 நவம்பர் 2011. புது தில்லி.  2G அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட ஐந்து பேருக்கு இன்று தில்லி உயர் நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி திரு. வி. கே. ஷாலி கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்குவதாக தீர்ப்பளித்தார். ”ஜாமீன் பெறும் இவர்களுக்கு, உச்சநீதி மன்றம் வழக்கமாக ஜாமீனில் விடுவிப்பவர்களுக்கு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்” என்று திரு. வி. ...

Read More »

சிறைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சி – செய்திகள்

24 நவம்பர் 2011, சென்னை.  மாநிலத்தில் குற்றவியல் நீதிமுறை நிர்வாக அமைப்பின் ஓர் அங்கமாக செயல்படும் சிறைத்துறை, சட்ட நடவடிக்கைகள் மூலம் சிறைத் தண்டனை பெற்ற சிறைவாசிகளை கட்டுப்படுத்தும் சீர்திருத்தி, புது வாழ்வு அளித்து, அவர்கள் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதற்கான முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. சிறைத் துறையின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து, சிறைக் கைதிகளின் நலனுக்கான பல சீர்திருத்தத் திட்டங்களையும், சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், தமிழக அரசு எடுத்து வருகிறது. பிறக்கும் போதே குற்றவாளியாக எவரும் பிறப்பதில்லை.  அவர்களது வாழ்க்கையில் ...

Read More »

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை – சீமான் அறிக்கை – செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை பற்றியும் ’டாம் 999’ திரைப்படம் பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை : முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், ‘டாம் 999’ என்ற பெயரில் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பது தமிழர், மலையாளிகள் இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியாகவே தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை ...

Read More »

சைனிக் மற்றும் மிலிட்டரி பள்ளிகள்

கேப்டன் கணேஷ் இந்திய பாதுகாப்புப் படைகளான இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக பள்ளி வயதில் இருந்தே மாணவர்களைத் தயார் செய்ய மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான் சைனிக் பள்ளிகள் (Sainik Schools) மற்றும் மிலிட்டரி பள்ளிகள் (Military Schools).  நாடு முழுவதும் மொத்தம் பதினெட்டு சைனிக் பள்ளிகளும் ஐந்து மிலிட்டரி பள்ளிகளும் உள்ளன.  இவைகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதோடல்லாமல் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெறவேண்டும்.  இப்பள்ளிகளில் நுழைவது ஒன்றும் ...

Read More »