சுப உதயம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை வேளையில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

காலை 05:00 மணிக்கு தொடங்கி 08:30 மணி வரை பல்வேறு புதிய அம்சங்களுடன் ஒளிபரப்பாகிசரும் இந்நிகழ்ச்சியில் 5 மணிக்கு பஜனையும், 05:30 க்கு ராக நமனமும் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு சுப்ரபாதமும் இடம்பெறுகிறது.  இதன் முத்தாய்ப்பாய் 06:30 மணிக்கு பிரபல உபன்யாசகர் வழங்கும் நாராயணியம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து யோகாவும் இடம்பெறுகின்றன.

சுப உதயம் நிகழ்ச்சியில் 7 மணிக்கு பல்வேறு பக்தி நிகழ்வுகளின் தொகுப்பான பக்தி சிஞ்சனா இடம்பெற பல்வேறு ஆலயங்களைப் பற்றிய அரிய தகவல்களுடன் ஒளிபரப்பாகும் தேவதா தர்ஷன் நிகழ்ச்சி இடம்பெறுகிறது.  பின்னர் அன்றைய நாள் குறித்த அரிய தகவல்களும், சிறப்புகளும் இடம்பெற இந்நிகழ்ச்சி நேயர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க