ராஜயோகம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் உபயோகமான நிகழ்ச்சி “ராஜ யோகம்”.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியின் படி அமையப் பெற்றதுதான் மனித வாழ்க்கை.  இப்பிறப்பில் நம்மால் முடிந்த நல்லவற்றை இயலாதோர்க்கும், இல்லாதோர்க்கும் செய்தால் இப்புண்ணியம் தொடரும் பிறப்புகளின் நம்மை நற்கதி அடையவைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.

அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பிரபல ஜோதிட நிபுணர் முனைவர் கே. ராம் அவர்கள் கலந்துகொண்டு தொலைபேசி மூலம் நேயர்கள் தங்களது இன்றைய காலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் எழுப்பும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியில் பல அரிய ஆன்மீகத் தகவல்களையும் பாதிக்கப்பட்டோர் பயன்பெற எளிதான பரிகார முறைகளையும் விளக்குவது இந்நிகழ்ச்சியின் சிறப்பு.  இதேபோல் அனைவரும் ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்றும் தினசரி இறைவனை வணங்கி நற்காரியங்களில் ஈடுபட வேண்டும் என்றும் முனைவர் கே. ராம் அவர்கள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றினால் ஒவ்வொருவருக்கும் ராஜயோகம் என்பதில் ஐய்யமில்லை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க