பொது

கந்தபுராணம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

வள்ளல் வடிவேல் முருகனின் அருமை பெருமைகளை, அழகுத் தமிழில் பிரபல உபன்யாசகர்  லட்சுமி ராஜரத்தினம் வழங்கும் பக்தி நிகழ்ச்சி கந்தபுராணம்.  ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சிறு சிறு பாடல்களும் இடம்பெறுவதால் கந்தபுராணம் நேயர்களின் பக்தி உணர்வை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அறுபடை வீடுகளில் குடிகொண்டு அருளாட்சி புரியும் முருகப் பெருமானின் அவதார பெருமைகளையும் அற்புத திருவிளையாடல்களையும் பல்வேறு கிளைக் கதைகளுடன் தனக்கே உரித்தான தனிப் பாணியில் வழங்குகிறார் லட்சுமி ராஜரத்தினம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க