பாலை திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் – சீமான் வேண்டுகோள் – செய்திகள்

0

2000 ஆண்டுகளுக்கு முன்பான, தமிழ்நாட்டு வரலாற்றை விவரிக்கும் “பாலை” திரைப்படத்தை வெற்றிபெறச் செய்வோம் என நாம் தமிழர் கட்சி அறிவிப்பு விடுத்துள்ளது.

இப்படம் வெளியாகப் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்டு படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன் ஊடகங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  அக்கடிதம் கண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், இயக்குநர் செந்தமிழனுடன் கைபேசியில் பேசினார்.

படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறிய இயக்குநர் சீமான், நாம் தமிழர் கட்சியின் இணையதளத்தில் இப்படத்தை வெற்றிபெறச் செய்யவேண்டியது தமிழர்களின் கடமை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இயக்குநர் சீமானின் இந்த அறிவிப்பிற்கு பாலை படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கை பின்வருமாறு: “நம் உறவு தோழர் ம.செந்தமிழன் இயக்கிய “பாலை” திரைப்படம் வரும் நவம்பர் 25(வெள்ளி) தமிழகத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழன் வரலாற்றை தமிழர் வாழ்வியலைச் சிறப்பாக எடுத்துக் காட்டி இருக்கும் இத்திரைப்படத்தைத் தமிழர்கள் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டியது நம் கடமை. இப்படத்தைக் குடும்பத்துடன் சென்று கண்டுகளித்துப் பெரு வெற்றி பெறச் செய்யுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.