கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – செய்திகள்

டிசம்பர் 9, 2011.  கொல்கத்தா.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற AMRI மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 03:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கட்டடம் முழுவதும் நச்சுப் புகை பரவியதால், 70க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 3 மருத்துவமனை ஊழியர்களும் இறந்தனர்.

இறந்தவர்களின் பெரும்பாலோனோர் படுக்கையை விட்டு எழ முடியாதவர்கள் மற்றும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.  மருத்துவமனையில் இருந்த மற்றவர்களால் ஒரு சில நோயாளிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது.

தீ பரவத் தொடங்கியவுடன் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ஓடிவிட்டதாகவும், மருத்துவமனையின் அனைத்துக் கதவுகளும் பூட்டப்பட்டதாகவும், தீயணைப்பு வாகனங்கள் இரண்டு மணி நேரம் கழித்து வந்ததாகத் தெரிவிக்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

இது கொல்கத்தாவில் 20 மாத இடைவெளியில் நடைபெற்றுள்ள இரண்டாவது பெரிய தீ விபத்தாகும்.  23 மார்ச், 2010 அன்று கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதில் நடந்த தீ விபத்தில் 43 பேர் பலியாயினர்.

AMRI மருத்துவமனை இமாமி குழுமமும் மேற்கு வங்க அரசும் இணைந்து அமைத்த ஒரு மருத்துவமனையாகும்.  இது இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவமனையாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்த 6 நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.  மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.  மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – செய்திகள்

 1. நேற்று ஒரு சாதனை தினம்.
  இன்று ஒரு வேதனை தினம்.
  பணம் கொழிக்கும் பன்றிகள்
  இன்று உயிர்களை அறுவடை செய்துள்ளன!
  இறந்தவர் பிறவாமை எய்தட்டும்!
  ஏமாற்றியவர் ஜாமீனில் வெளிவரட்டும்!

Leave a Reply

Your email address will not be published.