செண்பக ஜெகதீசன் 

சுயத்தை மறந்து

சுதந்திரத்தைத் துறந்து

கிளி

மனிதனின் மாய வலையில்

மாட்டிக் கொண்டது

கூண்டுக்கிளியாய்;

கூப்பிட்ட குரலுக்கு

ஓடி வருவதாய்..

தரும் ஓரிரண்டு

தானியமணிகளுக்காய்..

கிளி ஜோசியமாம்…!

 

அந்தக் கிளியுடன்,

அதை

அடிமையாக்கியவன்,

வைத்துப் பிழைப்பவன்,

வந்து

வருங்காலம் கேட்பவன்..

இந்த நால்வருக்கும்

இன்னும் வரவில்லையே

நல்ல காலம்…!

 

படத்திற்கு நன்றி: http://maduraidiary.blogspot.com/2007/10/parrot-astrology-is-expensive.html

Leave a Reply

Your email address will not be published.