சுட்டி உளவாளிகள் 4D – திரைப்படம்

’ஸ்பை கிட்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாக உள்ள 4டி படத்தை தமிழில் ’சுட்டி உளவாளிகள்’ என்ற பெயரில் 19 ஆகஸ்ட் 2011 அன்று வெளியிடவுள்ளனர்.  ஸ்பைகிட்ஸ் பெயரில் இதுவரை மூன்று படங்கள் வந்து சக்கை போடு போட்டுள்ளது. இப்போது நான்காவது படம், 4டியில் வெளியாக உள்ளது. முந்தைய படங்கள் 3டியில் வந்தன. ஸ்பைகிட்ஸ் நான்காம் பகுதி படத்தை ராயர்ட்ரோத்ரிகஜ் இயக்கியுள்ளார்.

மர்ம சாகசங்கள் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. மாயமந்திர சக்திகள் பிரமிப்பூட்டும்படி கற்பனைக்கு எட்டாத வகையில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

வாசனையை உணரும் வகையில் அரோமா ஸ்கோப் இப்படத்தில் புகுத்தப்பட்டு உள்ளதாம். பி.வி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.178 கோடி செலவில் தயாராகியிருக்கும் இந்த படம், தமிழில் சுட்டி உளவாளிகள் என்ற பெயரில் வருகிற வெளியாகிறது. 4டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள உலகின் முதல் வணிகப் படம் என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

 

 

About செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க