நிலவின் வெட்கம்

குமரி எஸ். நீலகண்டன்

கடலலைகளோடு

அசைந்து கொண்டும்

மிதந்து கொண்டும்

இருக்கிறது நிலா. 

கோடானுகோடி

உயிர்கள் தாவரங்கள்

ஒருங்கே குளித்துக்

கொண்டிருக்கின்றன

நிலாவில். 

கடும் புயலிலும்

காற்றிலும் மழையிலும்

எதுவுமாகாமல்

குளிர்ச்சிப் பார்வையுடன்

என்றும் சமன

குதூகலமாய் நிலா. 

ஆனால் சூரியன்

வந்தால் மட்டும்

வெட்கத்தில் வானத்தில்

தனது விண்மீன்

சகாக்களுடன்

கரைந்து ஒளிந்து

கொள்கிறது நிலா.

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க