பெண்களின் பலம் மற்றும் பலவீனம்

பவள சங்கரி

நம் இந்தியா பல இன, பல மொழி பேசும் மக்கள் வாழும் நாடு. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் திருமண முறை, அவர்கள் வாழும் முறை, உடுத்தும் உடை, உண்ணும் உணவு , சடங்கு, சம்பிரதாயம் என அனைத்தும் வங்காளப் பெண்ணிற்கோ அல்லது காஷ்மீரப் பெண்ணிற்கோ மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும். அனைவரையும் இணைக்கக்கூடிய ஒரே பாலம் என்றால் அது பக்தியும், அதனை ஊக்குவிக்கிற சமசுகிருத சுலோகங்கள் மட்டுமே. தென்னாட்டிலும், வடநாட்டில் மலைவாழ் சமூகங்களுக்குள் ஒரு சில என  தாய்வழிச் சமூகங்கள் இருப்பது உண்மை என்றாலும் அவை அளவில் மிக குறைந்ததாகவே உள்ளது. பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் திருமண பந்தம், தாய்மை, குடும்பப் பராமரிப்பு  போன்றவைகளை இயற்கையாகவே ஏற்றுக்கொண்டனர். இதுவே பெண்களின் பலம் மற்றும் பலவீனமாக இருக்கிறது.

Share

Comments

One response to “பெண்களின் பலம் மற்றும் பலவீனம்”

  1. பலம் பலவீனமாக மாறாமல் இருக்கவேண்டுமானால், இருபாலாரும் அதற்கு ஏற்றபடி இயங்கவேண்டும். கணவன் சமையறையில் உதவலாம். என் தாத்தா கறிகாய் நறுக்கிக்கொடுப்பார். தாய்மையின் மறுபக்கம் தந்தையின் பரிவு. இணைந்து இயங்குவது ஒரு கலை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *