தொழிலாளர் தினம்

 

ரா.பார்த்தசாரதி

 
தொழில்கள் சிறக்க தொழிலாளர்கள் தேவை

பொருட்கள் செய்யவும் தொழிலாளர்கள் தேவை

எந்திரங்கள் செய்தாலும் தொழிலாளி தேவை

அதனை இயக்கவும் ஒரு தொழிலாளி தேவை !

 

தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளி முக்கியம்

அவர்கள் இல்லை எனில் உற்பத்தி குறையும்.

அவர்களை நல்ல முறையில் நடத்துங்கள்

அவர்கள் நலனில் அக்கறைக் காட்டுங்கள் !

 

தொழிலாளியும் சாதிமதமற்ற மனிதன்தான்

அவனுக்கும் வீடு வாசல்என்பதுண்டு

முதலாளிகள் பலர் கசக்கிப் பிழிவதுண்டு

நியாத்தை கேட்க அவர்களுக்கு உரிமையுண்டு

 

தொழிலாளி மெச்சிய ஒரு முதலாளி இல்லை

முதலாளி மெச்சிய ஒரு தொழிலாளி இல்லை

என்றும் முதலாளி, தொழிலாளி முரண்பாடு

கோரிக்கைகள் ஏற்க தொழிலாளி போடும் கூப்பாடு

 

கார்ல்மார்க்ஸ் தொழிலாளர் இனத்தை மேம்படுத்தினார்

தொழிலாளர்க் கென தனி கொள்கைகளை வகுத்தார்

மே முதல்தேதி தொழிலாளர் தினமாய் கொண்டாடுகிறோம்

தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற பாடுபடுவோம்

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *