பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

17160640_1252909488096581_1882365069_n
24942309@N07_rமுத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – (102)

 1. நன்றியா…

  வாலிபம் என்பது
  விளையாட்டுக் களம்தான்,
  விளையாட்டு வினையாகாதவரை..

  சரித்திரம் படைப்பது
  சாதனைதான்,
  சறுக்கல் வராதவரை..

  பாதுகாப்பு ஏதுமின்றி
  பனைமரத்தில் ஏறி,
  பலரும் பார்க்கத்
  தன்படம் எடுக்கையில்
  தவறி வீழ்ந்தால்,
  உன்படம் வருமே
  கறுப்புக் கட்டத்தில்..

  கதறும் பெற்றோரைக்
  காணநீ இல்லாமல்போவதா
  காட்டும் நன்றி…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. அருகிவரும் பனைமரத்தை
     அணைத்தபடி ஏறிநிற்கும்
  திருமகனே இளைஞனே..நீ
      சேதிசொல்ல உள்ளதென்ன…
  உருகியுனைக் காதலித்த
      உத்தமியைக் கௌரவமாய்க்
  கருவமிகு சாதீயம்
      கொலைசெய்த காரணத்தால்…

  நீதிகேட்டு மரமேறி
       நிற்கின்றா யோ..அல்லால்
  நாதியற்ற மக்களெலாம்
       நல்லதொரு வாய்ப்பின்றி
  வீதியெங்கும் அலைகின்ற
       வெறுங்காட்சி கண்டுவெம்பி
  ஆதரவாய்ப் போராட
        அதற்காக ஏறினாயோ…

  மாறாக டாஸ்மாக்கில்
        மதுமயக்கம் கொண்டுமக்கள்
  சீரழியும் செயலதனால்
        மதுக்டைகள் மூடுதற்கே
  போராட ஓங்கிநின்ற
        பனைமரத்தில் ஏறினாயோ..
  வீறுகொண்டு வெறும்வார்த்தை
        வீணரினை நம்பாமல்

  ஏறுதழுவல் என்றதமிழ்ப்
        பண்பாட்டு விளையாட்டு
  மாறுபாடு ஏதுமின்றி
        மாநிலத்தில் நிகழ்வதற்குப்
  போரிட்ட மெரீனாவின்
       புரட்சியாளர்க் கென்றுதவ
  வேர்கொண்ட பனையேறி
       விரைவாக நின்றாயோ…

  உனக்குமுன்னே ஒருவனேறி
       உதவுதற்கு நிற்கின்றான்
  உனக்குவந்த குறுஞ்செய்தி
       உரைப்பதற்கு முயல்கிறாயோ…
  முனைப்போடு நீநடத்த
       முன்னெடுத்த போராட்டம்
  பனைமரத்தை சாட்சியமாய்ப்
        பகர்வதற்கே ஏறிநின்றாயோ…

  எதுகார ணமென்றாலும்
        இளைஞருயிர் பணயமாக்கும்
  புதுமையினைத் தவிர்த்துவிடு..
         பூமிநின்று போராடு…..
  பதுமையென மக்களினைப்
         பார்க்கின்ற ஆட்சியரின்
  பொதுமையினைப் புறந்தள்ளிப்
         புதுப்பிப்பாய் விழிப்புணர்வை!   
           கவிஞர் ” இளவல் ” ஹரிஹரன், மதுரை.
         

 3. ஒற்றை முத்தத்தில் தொடங்கிய பந்தம்
  ஆயிரம் முத்தங்கௗில் அௗவௗாவி
  என் அங்கமெல்லாம் ஆரத் தழுவி
  என்னை ஆர்ப்பரித்தவௗ்

  வாரம் ஒரு முறையாவது வந்து விடுவாௗ்., நான்
  வாடி விடக்கூடாது என்பதற்காக

  அவௗில்லாமல் நானில்லை
  அறிவாௗ் அவௗ்

  சொல்லித்தான் தெரிய வேண்டுமோ.., என
  சொல்லாமல் விட்டு விட்டேன்
  சொத்தாய் மதிக்கும் அவௗிடம்
  சொர்க்கமென நினைக்கும் என் காதலை..

  என்ன நினைத்தாௗோ தெரியவில்லை
  என்னை பார்க்க வந்து பல நாட்கௗாகிவிட்டது
  எட்டி பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்
  எதுவும் தெரியவில்லை

  உற்றானாக நினைத்து கேட்கிறேன்
  உதவி வேண்டும் தம்பி
  உன் கையில் இருக்கும் பெட்டியில் எல்லாம் தெரியுமாமே!
  உற்றுப் பார்த்து சொல்

  எப்பொழுது வருவாௗ்
  என்னவௗ் என்று..

  மழைக்காக…,
  மரம்

 4. உதவி..

  ஒற்றை முத்தத்தில் தொடங்கிய பந்தம்
  ஆயிரம் முத்தங்கௗில் அௗவௗாவி
  என் அங்கமெல்லாம் ஆரத் தழுவி
  என்னை ஆர்ப்பரித்தவௗ்

  வாரம் ஒரு முறையாவது வந்து விடுவாௗ்., நான்
  வாடி விடக்கூடாது என்பதற்காக

  அவௗில்லாமல் நானில்லை
  அறிவாௗ் அவௗ்

  சொல்லித்தான் தெரிய வேண்டுமோ.., என
  சொல்லாமல் விட்டு விட்டேன்
  சொத்தாய் மதிக்கும் அவௗிடம்
  சொர்க்கமென நினைக்கும் என் காதலை..

  என்ன நினைத்தாௗோ தெரியவில்லை
  என்னை பார்க்க வந்து பல நாட்கௗாகிவிட்டது
  எட்டி பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்
  எதுவும் தெரியவில்லை

  உற்றானாக நினைத்து கேட்கிறேன்
  உதவி வேண்டும் தம்பி
  உன் கையில் இருக்கும் பெட்டியில் எல்லாம் தெரியுமாமே!
  உற்றுப் பார்த்து சொல்

  எப்பொழுது வருவாௗ்
  என்னவௗ் என்று..

  மழைக்காக…,
  மரம்

 5. பனை நண்பன்
  ================

  பாதி மரமேறி பக்குவமாய்ப் படமெடுத்து
  பனைமரத்தின் பயனையெலாம் பார்புகழச் செய்தாயோ!

  பலவித மரங்களிலே பனைமரம் போலாகுமா!
  பிறர்வாழநீ வாழுமுன் குணத்துக்கது ஈடாமோ!

  பெற்றோர் வளர்த்த பிள்ளைகூட உதவாதானால்..
  வளர்க்காமலே நீவளர்ந்து பிறருக்கு உதவுகின்றாய்!

  நண்பரைத் தேர்ந்தெடுக்க முக்குணத்தில் ஒன்றாக..
  தென்னை வாழையோடு உன்குணமு மொன்றாகும்!

  நண்பனுக்குகந்த குணமென உத்தமநண்பணுக்கு..உன்
  பனைக்குணமே பெரிதென்றான் அர்த்தமுள்ளகவியரசன்!

  முக்குணத்தில் சிறந்த சாத்விக குணம்பெற்று..
  பூவுலகக் கற்பகத் தருவென தாரணியில் புகழடைந்தாய்!

  கயவர்களை இனம்கண்டு பனைமரத்தி லொருமுறை..
  கட்டிவைத்து உதைத்தால் திருந்திவாழ வழியுண்டாம்!

  நெட்டைப் பனையென்றும் நெடியமரமென்றும்..
  நேர்மைக் கோர் உதாரணமாய் திகழுகின்றாய்!

  பனைமரமேறிப் பரிசுப்பெற்ற வாலிப இளைஞனுக்கு..
  பெண்கொடுத் தாருண்டென்ப தோர்க் காலமுண்டாம்!

  பழுத்துக் கனிந்தால் பனம் பழமாகவும்..
  பழுக்கா விட்டால் நுங்கெனவும்..பல்வகையில்

  பித்தர்களுக்கு மருத்துவம் வேண்டா மவன்..
  பித்தம்தெளிய யுன்பழம் கொடுத்தால் போதுமாம்!

  உயிரின முண்ணக் கிழங்குவெல்லம் கருப்பட்டியென..
  புல்லினத்தில்பிறந்து பேரினமாய் நின்று உதவுவாய்!

  வெட்டி வீழ்ந்தாலும் வீணாகமல்..உத்திரமாக..
  கட்டிவாழுயெம் குடிலுக்கு வலிமை சேர்த்தாய்!

  சித்தர்களின் சிந்தனைகள் சித்திரஎழுத்துவடிவமாக..
  சிறந்த இலக்கியங்களுக்கு ஏடாகி படிவம்கொடுத்தாய்!

  தமிழ் வளர்ச்சிக்கு உதவிய ஒரேமரமென்றும்..
  மொழிக்குதவிய முதல் மரமெனவும்நீ உலகறிவாய்!

  வெப்பக்கதிர் வீச்சைத் தணிக்க..விரிந்துபரந்த..
  விசிறியாகி வெங்கதிர் தவிர்த்தாயோர் காலத்தில்..

  மரம்தானனென இகழ்சொன்னா லதைமறுத்து..வீரமுடன்..
  தனிமரமாய்த்தோன்றி மரமினத்துக்கு மங்காப்புகழ்சேர்த்தாய்!

  காய்ந்து கயிறாகிநீ கால்நடையை கட்டினாலுமுன்..
  கட்டுக்கடங்காப் பயன்புகழ் வாழிய வாழியவே!

  மாநிலமரமென தமிழ்மரபை தமிழ்குடியைப் பறைசாற்றும்
  பனைநண்பனுனை மானுடர்கள் நினையாத நாளில்லையே!

 6. தடம் மாறும் போராட்டம்

  தையல் நாடி மையல் கொண்ட திராவிடப் பண்பாட்டில்
  பனைமடலேற்றம் கண்டான் பண்பாட்டுத் தமிழன்
  அடல் கொண்டதே மடலேற்றம்
  மடல் வென்றதே மனமாற்றம்
  மடல்மா ஏறிய ஆண்மை
  மனம் மாறியதே பெண்மை
  மனம் மாறா பெண்மைக்குக் காட்டிய போராட்டம்
  காலமாற்றத்தில்
  காதலில் புகுந்ததே கள்ளத்தனத்தின் ஊடாட்டம்
  கைபேசியின் காட்சிப் பதிவுகளில்
  காதல் களியாட்டம்
  கைகூடா காதலருக்கோ
  காட்சிகளின் சாட்சிகளே வெறியாட்டம்
  போராட்ட முறை மாறலாம்
  போராட்ட அறம் மாறலாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *