-இன்னம்பூரான்

innam

ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [2]

பொதுநலம் மக்களாட்சியின் இலக்கு. மக்களாட்சியை நடத்தும் நிர்வாகத்தில் சட்டசபை, நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவை இடம்பெறுகின்றன. திராவிட ஆட்சிகள் தலையெடுக்கும் முன் கலோனிய அரசிலும், காங்கிரஸ் அரசிலும் லஞ்சம் இருக்கத்தான் இருந்தது. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன் மாமூல், கிம்பளம் ஆகியவை கூட சொற்பமாகவே இருந்தன. மக்கள் ஆதரவும், அரசு போஷாக்கும் கிடையாது. கடந்த ஐம்பது வருடங்களில் மக்களும் முறைகேடுகள் செய்வதில், மாநில அரசின் ஆசியுடன் பழக்க வழக்கமாக ஈடுபடத்தொடங்கினர். திருமங்கலம் சூத்திரம் என்று அறியப்பட்ட லஞ்ச லாவண்யம், மக்களை வளைத்துப்போட்டு, தமிழினத்தையே கயவர் கூட்டமாக்கியது, ஆர்.கே. நகர் அவலம் யாவரும் அறிந்ததே. சர்க்காரியா அறிக்கை நம்மைத் தலைகுனிய வைத்துப் பல்லாண்டுகள் ஆயின.

வீடு, மனை விவகாரங்கள். வில்லங்கங்களில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில், கோயில் சொத்தை அபகரிப்பதில் நாம் நிகரற்றவர் என்று மார்தட்டிக் கொள்கிறோம்!

அதருமமிகு சென்னையில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிகளை மீறியவை. இது மக்களின் கைங்கர்யம்.

செப்டம்பர் 9, 2016இலிருந்து மார்ச் 28, 2017 வரை அங்கீகாரம் பெறாத மனைகளும், விவசாய நிலங்களும், உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் 9,760 பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2581 வேலூரிலும், 2434 மதுரையிலும், 1412 சென்னையிலும். பிராது என்னவோ 4 லக்ஷம் பதிவுகள் கோர்ட்டாரை மதிக்காமல் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிறது.

நாம் எப்போது நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்?

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/05/9760-documents-of-properties-recorded-during-ban-across-tamil-nadu-1601246.html

***

சித்திரத்துக்கு நன்றி:
https://pbs.twimg.com/media/ByifZchCIAAXHHf.jpg

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கோப்புக்கூட்டல் [2]

  1. பொதுநலம் மக்களாட்சியின் இலக்கு. மக்களாட்சியை நடத்தும் நிர்வாகத்தில் சட்டசபை, நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவை இடம்பெறுகின்றன.
    ==========================================================

    இப்போதெல்லாம், நீதிமன்றம் தன்னுடைய நீதியை தயங்காமல் எடுத்துரைத்தாலும், அதை அமல் படுத்துவதில் தாமதம், தயக்கம், கொஞ்சம் ஆறப் போடுவது பிறகு ஒருவழியாக நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் அலட்ச்சியப்படுத்துவது போன்ற செயல்கள்தான் மக்களாட்ச்சியின் நோக்கமாக இருக்கிறது.

    நீதி கேட்டுப் போட்ட வழக்கில் தீர்ப்பு வந்தாலும், அதை உரிய நேரத்தில் அமல் படுத்தாத காரணத்தால், மீண்டும் அது “நீதிமன்ற அவமதிப்பு வழக்காக” அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

    கடைசியில் மனுதாரரோ, குற்றவாளியோ இறந்துவிட அந்த வழக்கு காலாவதியாகி “கோப்புக் கூட்டலில்” இருந்து கழிக்கப்பட்டு, வழக்கின் கோப்பை ஒருவழியாக கட்டிவைத்து முடித்து வைக்கப் படுவதுதான் இன்றய காலகட்டத்தின் நிலை.

    எவ்வளவு வழக்குகள் இதே போன்று கையாளப் பட்டிருக்கின்றன் என்பதற்கும், நிறைய கூட்டல் கழித்தல்களை எண்ணிக்கையில் சொல்ல முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *