அன்பின் பரிமாணம்
ரா. பார்த்தசாரதி
மண்ணின் காதல், மழை துளியே
விண்ணின் காதல், அழகிய மதியே
மலையின் காதல், மேகம் அன்றோ
பூவின் காதல், வீசும் தென்றலன்றோ !
காதல், இது இல்லாத இடம் ஏது ?
காகிதமும் காதலிக்கும்,தன் மேல் மேவும் எழுதுகோலை
காதல் ஒன்றையொன்று சார்ந்து நிற்குமே
ஊருக்குள் அவை அடையாளம் காட்டுமே !
காதல் என்பது அன்பின் பரிமாணமன்றோ!
இரு இதயங்களின் சங்கமம் அன்றோ
காதல் என்பது இரு விழிகளின் நேசமே
அதுவே அவர்களின் காதல் தேசமே !
உன்னை என் உள்ளத்தில் அள்ளித் தெளித்தேன்
இரவில் கனவில் விளையாடி, உறவில் கலந்தேன்
உன்னிடத்தில் என் நினைவு,என்னிடத்தில் உன் நினைவு
நம் அன்பின் அளவிற்கு எல்லையில்லா முடிவு !
இதுதான் காதலோ? கண்கள் இரண்டும் சொந்தம் கொண்டாடுதோ
குறைகள் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளும் உண்மை காதலோ
அன்பு குறையாமல் மாற்றம் காணாத இன்ப காதலோ
இரு பார்வைகள் சேர்ந்தும், வாய் பேச முடியாத காதலோ !
