முல்லைஅமுதன்

 

ஊர்வலத்தில் கோசமிட்டபடி

போனவன்

கையில்

திணித்துச் சென்ற

தேசியக்கொடியை

உயரே பிடித்தபடி

உங்களுடன்

கலந்து கொள்ளவேண்டும்தான்..

முன்னால் போகும்

உங்களில் ஒருவன்

உருவிச் சென்ற

கோவணம்..?

மறைவிடத்திலிருந்து

வெளிவரமுடியவில்லை.

நீ தந்த தேசியக் கொடியை

என்ன செய்ய?

இனி இருட்டில் தான்

வெளியேற வேண்டும்..

 

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க