போற்றுவோரைக் காத்துவிடு!
-சரஸ்வதி ராசேந்திரன்
அகிலத்தைக் காப்பவனே
ஆதிரை மேய்த்தவனே
யசோதை மைந்தனே
யமுனை நீராடிய மாதவனே
எழில்முகம் கொண்டவனே
ஏழுமலை வாசனே
மண்ணைத் தின்றவனே இம்
மண்ணுலகம் ஆள்பவனே
கோபியர் கொஞ்சும் கண்ணனே
கோவர்த்தன மலை எடுத்தவனே
பால்வடியும் வதனம் கொண்டவனே
பிரபஞ்சத்தை வாயில் காட்டியவனே
குறும்புத்தனம் காட்டியவனே
குழலூதும் கண்ணனே
ஏற்றித் தொழுகிறோம்
எளியவரைக் காத்துவிடு உன்
பிறந்த நாளில் உன் பொன்னடி
போற்றுவோரைக் காத்துவிடு!