Author: சரஸ்வதிராசேந்திரன்

  • பொங்கலே வருக

    download

     

    பொங்கலே வருக புதுப்பொலிஉ தருக

    அக்குப்பையையும் புறகுப்பையையும்

    அழகாக தீயிட்டு போக்க வேண்டும்

    ஆகாத செயலெல்லாம்அணுகாது இருக்க

    ஆதரவு தந்து அபயம் அளிக்க வேண்டும்

    இதமிலா பிணி நோய் அகற்றிட செய்து

    இதயத்திலே சாந்தி நீ தர வேண்டும்

    உண்மைகள் பேசி நன்மைகள் செய்ய

    உயிரெல்லாம் உயர்வுற உதவிட வேண்டும்

    ஊக்கத்தோடுமக்களெல்லாம் உழைக்க

    ஊருக்கே நல் வழி காட்டவேண்டும்

    எல்லை இல்லாத அன்புடன் ஊரெல்லாம்

    என்றும் விளங்கிட வழி செய்யவேண்டும்

    ஏர் உழவன் துன்பம் தீர்ந்து விவசாயம்

    ஏற்றமுற செய்து உழவு தழைக்கவேண்டும்

    பொய்மைத்தனம் புறந்தள்ளி பொசுக்கவேண்டும்

    பொய்ய்யை மெய்யாக்கும் மோசடி போக வேண்டும்

    எல்லாத் தீமைகளும் ஒழிந்து நாட்டில்

    நல்லவைகளே பொங்க வேண்டும் இப்பொங்கல்

    நன்னாளில்பொங்கும் மங்களம் எங்கும் தங்கவேண்டும்

    சரஸ்வதி ராசேந்திரன்

    Share
  • உணர்ச்சி சிதையாதே

     

    சரஸ்வதிராசேந்திரன்

     

    அருமை மகனே அன்புருவே

    ஆசைமகனே கேளாயோ

    உடலில் பலமே இருந்தென்ன

    உள்ளத்தில் திறமே வேண்டுமடா

    நடையில் பணிவுடன் நற்குணமும்

    நாவில் நற்சொல் நல்மனமும்

    கொண்டால் அல்லவா நீ மனிதன்

    உறக்கம் போக்கு வையத்தில்

    ஊக்கம் பிறக்க பாடுபடு

    தேடும் வாழ்வில் வெற்றிதனை

    சேர்க்கும் மணக்கும் நல்லுணர்வே

    நல்லோர் ஏற்க நன்மைசெய்

    உயர்ச்சிஅடைய வழி சொன்னேன்

    உணர்ச்சி சிதைந்தால் வாழ்கையில்லை

    சரஸ்வதிராசேந்திரன்

    Share
  • பாதப் புகலொன்றே போதுமப்பா

    சரஸ்வதிராசேந்திரன்

    OLYMPUS DIGITAL CAMERA

     

     

     

     

     

     

     

     

    பாதப் புகலொன்றே போதுமப்பா

    முதல்வனே மூஷிக வாகனனே

    முதல் வணக்கம் உனக்கே ஐயனே

    பரமன் கொழுந்தே உமை பாலகனே

    பேழை வயிறோனே மோதகப்பிரியனே

     

    அழகு முருகனுக்குதவிய ஆசை

    அண்ணனே ஆனை முகத்தோனே

    அப்பமோடு அவல்பொரி படைப்பேன்

    அருள் தருவாய் ஆதி சக்தி மகனே

     

    சங்கரன் மகனே சஞ்சலம் தீர்ப்பாய்

    சங்கரி மைந்தா உன் தாள்பணிந்தேன்

    உத்தமன்உனையேஉறுதியாய்நம்புகிறேன்

    பித்தன்எனைஆண்டருள்வாய் பித்தனின் மகனே

     

    தொல்வினைகள் தொல்லை செய்யாமலே

    தடுத்தென்னை தாங்கி நிற்பாய் ஐயனே

    பேரெதுவும் வேண்டாம் புகழ்வேண்டாம்உன்

    பாதப்  புகலொன்றே போதுமப்பா  தூயனே

     

     

    Share
  • போற்றுவோரைக் காத்துவிடு!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    அகிலத்தைக் காப்பவனே
    ஆதிரை மேய்த்தவனே
    யசோதை மைந்தனே                          Cute Lord Krishna
    யமுனை நீராடிய மாதவனே
    எழில்முகம் கொண்டவனே
    ஏழுமலை வாசனே
    மண்ணைத் தின்றவனே இம்
    மண்ணுலகம் ஆள்பவனே
    கோபியர் கொஞ்சும் கண்ணனே
    கோவர்த்தன மலை எடுத்தவனே
    பால்வடியும் வதனம் கொண்டவனே
    பிரபஞ்சத்தை வாயில் காட்டியவனே
    குறும்புத்தனம் காட்டியவனே
    குழலூதும் கண்ணனே
    ஏற்றித் தொழுகிறோம்
    எளியவரைக் காத்துவிடு உன்
    பிறந்த நாளில் உன் பொன்னடி
    போற்றுவோரைக் காத்துவிடு!

     

     

    Share
  • கடைசியில்—மிஞ்சுவது

    சரஸ்வதி ராசேந்திரன்

     

    அண்டத்தில் பிறந்தவரெல்லாம்
    பிண்டத்தில் ஒரு நாள் அடக்கம்
    கண்டபடி பொருள் சேர்க்க இதில்
    சண்டை போட்டு அலைவதேன் ?

    பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை
    பொருள் பொதிந்த வார்த்தைதான் அந்த
    பொருள் அளவோடு இருந்தாலே
    பொருந்தாதா வாழ்க்கை பயணம் ?

    கோடி கோடியாய் பணத்தை சேர்க்க
    ஓடி ஓடி ஓய்வில்லாமல் தேடிஅலைந்து
    கூடை கூடையாய் குவித்து வைத்தாலும்
    பாடையிலே போகும் போது கூடவா வரும்?

    நிறைந்த மனதை உடையவனே
    நிம்மதியாக வாழ்கிறான்
    செல்வத்தின் நிலையாமையை அறிந்தவன்
    செல்வத்தைத்தேடி பேயாய் அலைவதில்லை

    கூடுகின்ற நட்பு கூட்டமும்
    நாடுகின்ற உறவு கூட்டமும்
    ஆடை கழற்றுவது போன்று
    ஜாடையாக ஒதுங்கிடுவார் செல்வம் போனால்
    யார் யாரையோ வஞ்சித்து பொருள்
    சேர்த்து என்ன பயன் உனக்கு ?
    கடைக்கூட்டு நேரத்தில்
    கடைசியில் மிஞ்சுவது இதுதான்

    விளக்கம் – கடைக்கூட்டு—-அந்திம சமயம்
    ஆதாரம்; ; தமிழ் அகராதி

     

    Share
  • எங்கும் மங்களம்அருளிடு ஐங்கரனே !

    சரஸ்வதிராசேந்திரன்

    ஆதி   முதல்வனே

    ஆனை முகத்தவனே

    ஆதிசக்தி மைந்தனே

    ஆனந்த வினாயகனே

    முன்னை வினையின்

    முதலைக் களைபவனே

    அருள்வாய் உனைதினம்பணிந்தேன்

    அன்னை பராசக்தி அருள் மகனே !

     

    மத்தள   வயிறோனே

    உத்தமி  புதல்வனே

    மோதகப் பிரியனே

    மூஷிக    வாகனனே

    வடிவேல்  சோதரனே

    அடியினைத் தொழுவேன்

    தேனொடுபாலும்தினம் தருவேன்

    திருவருள் தந்திடுவாய் சம்பு குமாரா

     

    சங்கரன்  புதல்வனே

    ஐங்கர   நாயகனே

    அவல்பொரிஅப்பமுடன்

    அரிசிக்கொழுக்கட்டை

    வடை சுண்டலும்படைப்பேன்

    அடைக்கலம் தருவாய் ஐயனே

    சீக்கிரம்  வந்திடப்பா  வந்தெனக்கு

    சிவனாந்தம் தந்திடுவாய் சிவன் மகனே

    கணபதியே  உன் பாதம்

    வணங்கி துதிசெய்தேன்

    வல்வினை எல்லாம்

    வேறருப்பாய்வினாயகா

    வல்லபை விக்ன நாயகா

    வாழ்த்திப் பணிந்தேன் உன் பாதம்

    பொங்கும் கருணைப் பொழிந்து

    எங்கும் மங்களம் அருளிடு ஐங்கரனே

    Share
  • பாடிப்பணிவோம்

    சரஸ்வதிராசேந்திரன்

    krishna

    கொண்டை மயில் சீவி
    குழலூதும் கண்ணா
    கோபியர் கொஞ்சும்
    கோகுல கிருஷ்ணா
    மாய லீலை செய்யும்
    ஆயர்பாடி கண்ணா
    கேட்டதை கொடுக்கும்
    கீதையின் நாயகா
    குருவாயூரில் நிற்கும்
    குழந்தை கண்ணா
    மதுராவில் பிறந்து
    கோகுலத்தில் வளர்ந்து
    துவாரகையை ஆண்டவனே
    குன்றம் ஏந்தியே
    குளிர் மழை காத்து
    பசுக்கூட்டதைக் காத்தவனே
    கமலம் போன்றகண்ணா
    கண்ணாய் இருந்து காப்பவனே
    உன் வேய்குழலின் நாதம்
    வீசி வரும் கீதம்
    எங்களுக்கு வேதம்
    பாடிப்பணிவோம் உன் பாதம்

    Share
  • கடன்

    சரஸ்வதி ராசேந்திரன்

     

    ‘’என்னங்க. பேசாமலேயே உட்கார்ந்திருக்கீங்க,கடன்காரன் எப்படி திட்டிட்டுப் போனான் ,   ஒரு வாரத்துக்குள்ளே பணத்தை கொடுக்கலைன்னா   சாமானெல்லாம் ரோட்டுக்கு வந்திடும்னு சொல்லிட்டுப்போறான்  நீங்க என்னடான்னா…’’’ கீதா சொல்ல

    ‘’எனக்கு என்ன காது செவிடா? இல்லே தமிழ் தெரியாதா? வேற மொழியில சொன்னமாதிரி மொழி பெயர்க்கிறாயா?எல்லாம் காதுல விழுந்துது ‘’எரிந்து விழுந்தான் வினோத்

    ‘’என்ன செய்யப்போறீங்க’’

    ‘’ ஒரு வாரம் இருக்கில்லே  யோசனை பண்ணுவோம் ‘’

    தெரிந்தவர்களிடம்  எல்லாம் கேட்டு பார்த்தான் கிடைக்க வில்லை

    நாள் நெருங்க நெருங்க பயம் அப்பிக் கொண்டது .

    ‘’என்னங்க தெருவே வேடிக்கை பார்க்கப் போகுது   அவமானமாகப்போகுது.. என்ன செய்யப் போறீங்க?’’

    ‘’ குடும்பமே தூக்கமாத்திரை சாப்பிட வேண்டியதுதான் .சும்மா தொணதொணக்காதே  உங்க வீட்டிலேயும் எங்க வீட்டிலேயும் கேட்கமுடியாது நாம இருக்கிற லட்சணத்திலே காதல் திருமணம்  வேறு..  கடைசியா நம்மயோசனைத்திலகம் யோகேஸ்வரனை கேட்போம்   அவனாவது உருப்படியா ஏதாவது சொல்றானா பார்ப்போம் இதோவரேன் ‘’சொல்லிவிட்டு வெளியேறினான் யோகேஸ்வரன் சொன்ன யோசனை பிடித்திருந்தாலும்  உயிருக்கு மோசம் வந்தால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது வினோத்திற்கு. அடுத்த   நாள்-

    தெருவில் ஒரே களேபரம்  .மாற்றுக்கட்சிக்காரன் எதிர்க்கட்சிக்கார தலைவரை கேவலமாக பேசி  விட்டதால்  துடித்தெழுந்த தொண்டர்கள்  மாற்றுக்கட்சிக்காரனின் உருவ பொம்மையை கொளுத்திக்கொண்டிருந்தார்கள்  .அப்பொழுது யோகேஸ்வரன் கண்ணைக்காட்ட  யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் வினோத் ரப்பர் செருப்புடன் எரியும் உருவப்பொம்மையை மிதித்து அணைக்க முற்பட திடீரென வினோத்தின் பேண்ட் பற்றி யெரிய..யோகேஸ்வரன்  ’’ வேண்டாண்டா  தலை வருக்காக தீ குளிக்காதே என்று சத்தமிட்டபடியே அவனை மணலில் போட்டு புரட்ட   தொடைகள் வெந்த எரிச்சலில் வினோத் கத்த- ஆஸ்பிடலுக்கு கொண்டுபோனார்கள்..என்னவோ  தலைவருக்காக தீகுளித்ததுபோல் பாவலா செய்ய ..எதிக்கட்சியின் தலைவர் தன்னை கேவலாமாகப் பேசியது பொறுக்காமல்  இப்படி யொரு தொண்டனா என எண்ணி உடனடியாக  தீக் குளித்த குடும்பத்திற்கு இரண்டு லட்சம் பணமும் ஆஸ்பிடல் செலவையும் ஏற்றுக் கொண்டார் ..யோகேஸ்வரன் ஐடியா ஒர்க் அவுட் ஆனதால்  வினோத் தன் கடனையும்  யோகேஸ்வரனுக்குரிய பங்கையும் கொடுத்து கடன் காரனிடமிருந்து தப்பினான்.

    Share
  • விதையொன்றுபோட….

    சரஸ்வதிராசேந்திரன்

    சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான் . அவர்களுக்கு ஒரே மகள் ,,ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது.

    ‘’இப்ப என்ன அவச்ரம் அவளுக்கு?’’

    ‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது இதுதான் சரியான வயது ’’

    ‘’இல்லை அவள் ..வேலைக்குபோகனும்னு ..’’

    ‘’அதுக்கெல்லாம் அவசியமில்லை ..போற இடத்திலே நல்ல வசதி’’

    கேட்டுக்கொண்டே வந்த அகிலா ’’ யாருக்கப்பா திருமணம் ?’’கேட்டாள்

    ‘’உனக்குத்தான் அகிலா ‘’

    ‘’ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ‘’

    ‘’ நான் என் நண்பனிடம் வாக்கு கொடுத்திட்டேன் அகிலா’’

    ‘’சாரி ப்பா ‘,பெற்றவர்களை நான் மதிப்பவள் தான் ஆனால்..அதுக்காக நான் சுயத்தை இழக்க முடியாது ‘’

    ‘’’’சுயமா அதென்ன ?’’

    ‘’ நீங்க உங்க மனசுக்கேத்த பெண்ணைத்தானே எல்லா தடைகளையும் மீறி பண்ணிகிட்டீங்க, உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?

    ‘’அப்ப நீ யாரையாவது லவ் பண்றியா?சொல்லு ‘’

    ‘’இது வரை யாரையும் காதலிக்கலே அந்த நேரம் வரும்போது சொல்றேன் ,அது வரை பொறுமையா இருங்க ‘’ சொல்லி விட்டு போனாள்.

    வாயடைத்து நின்றார் சந்தானம் .விதையொன்று போட சுரைஒன்றா முளைக்கும்

    Share
  • சித்திரைப்பெண்ணே வருக!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    சித்திரைப்  பெண்ணே வருக
    சித்தம் மகிழ்ந்திட அருள்தருக
    துன்முகி  வருடமே  வருக                    newyear1
    துன்பங்கள்  தீர்த்திட  அருள்க
    உயிர்கள்  உயிர்த்திட  வருக
    பயிர்கள் செழித்திட மழைதருக
    வறுமையை  ஓட்டி  அருள்க
    குறுகிய  எண்ணம் தீர்க்க வருக
    பருவம் தவறாமல் மழை தந்து
    உருவாக்கி  ஏற்றம் தருக உலகுக்கு
    வசந்த  காலமே   வருக
    இசைந்து  இன்பம் தருக
    அளவாய் மழை வெயில் தந்து
    வளமாய்  நாட்டை ஆக்குக
    இளவேனில் காலமே வருக
    இளநீர்போல் சுவை தருக!

     

     

    Share
  • எழுந்து வா கலாம்! 

    -சரஸ்வதி ராசேந்திரன்

    தமிழ்  நாட்டின்
    கோடியில் பிறந்தாலும்
    கோடிக்கு ஆசைப்படாத கோமானே!           abdul-kalam
    உன் நாடி  நரம்பெல்லாம்  இந்திய
    நாட்டின் நலம் மட்டும்தானே!

    ஜனாதிபதியானாலும்  நீ
    மாடி வீட்டுக்கு  ஆசைப்படவில்லை
    தேடித் தேடி அலைந்தாலும்  உனைப்போல
    தெய்வமகன்  எங்களுக்குக்  கிடைப்பாரா?

    கூடிக்கூடி அழுதாலும் உன்னைக்
    கூற்றுவன்  திரும்ப விடுவானா?
    ஆடிப் பாடி  ஆண்டவனைத் தொழுதாலும்
    ஆட்கொண்டவன் விடுவிப்பானா?
    எத்தனையெத்தனை பதவிகள் ஏற்றாலும்
    புகழ்போதை என்றுமே  உனக்குப்
    பொய்முகம்  அணிவித்ததில்லை

    மாணவர்களுக்கு  வழிகாட்டியாய்
    மக்களுக்கு  நல்ல தலைவனாய்
    அரசியல்வாதிகளுக்குப்   பாடமாய்க்
    குழந்தைகளுக்குப்  பிடித்தவராய்
    அனைவரையும்  நல்ல மனத்தால்
    ஆட்கொண்டாய் அன்பனே!
    அப்துல்கலாமே! உன்னைக் காலனுக்குக்
    காவு கொடுத்துவிட்டுக்
    கையறு நிலையில் இந்தியாவே
    கலங்கி  நிற்கிறது

    எழுந்து வா கலாமே…!

    Share
  • நல்லது எல்லாம் தருவாயே!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    ஆற்றங்      கரை        ஓரத்திலும்
    அரச         மரத்தடி        கீழும்
    அமர்ந்தி   ருக்கும்        நந்தி மகனே!                   lordganesh
    அன்னை    பராசக்தி    மைந்தனே
    உன்னைத்     தினம்        பணிந்தேனே
    சங்கரன்      மகனே     சட்டென வந்து
    சங்கடம்      தீர்த்திடு    ஐங்கரனே!

    யானை        முகம்    கொண்டவனே
    யானுனைத்    தினம்     தொழுதேனே
    வருவாய்    தருவாய்    அருள்தனை
    வடிவேல்     அன்புச்       சோதரனே
    குவலயம்     போற்றும்    குண நாதா
    குருவாய்      வருவாய்    அருள்வாயே!

    முழுமுதற்      கடவுள்   மூஷிகனே
    கொழுக்        கட்டை    வடையுடன்
    அப்பமோடு    அவல்       பொரியும்
    தப்பாமல்       நான்       படைப்பேன்
    வல்லபை     நாதா         வருவாயே
    நல்லதை     எல்லாம்    தருவாயே!

     

    Share
  • விதையொன்றுபோட….

    சரஸ்வதி ராசேந்திரன்

    சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான்.

    அவர்களுக்கு ஒரே மகள். ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் .

    மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது,
    ‘’இப்ப என்ன அவசரம் அவளுக்கு?’’

    ‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது இதுதான் சரியான வயது ’’

    ‘’இல்லை அவள் ..வேலைக்குபோகனும்னு ..’’

    ‘’அதுக்கெல்லாம் அவசியமில்லை ..போற இடத்திலே நல்ல வசதி’’

    கேட்டுக்கொண்டே வந்த அகிலா ’’ யாருக்கப்பா திருமணம் ?’’கேட்டாள்
    ‘’உனக்குத்தான் அகிலா ‘’

    ‘’ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ‘’

    ‘’ நான் என் நண்பனிடம் வாக்கு கொடுத்திட்டேன் அகிலா’’

    ‘’சாரி ப்பா ‘,பெற்றவர்களை நான் மதிப்பவள் தான் ஆனால்..அதுக்காக நான் சுயத்தை இழக்க முடியாது ‘’

    ‘’’’சுயமா அதென்ன ?’’

    ‘’ நீங்க உங்க மனசுக்கேத்த பெண்ணைத்தானே எல்லா தடைகளையும் மீறி பண்ணிகிட்டீங்க,உஙளுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?

    ‘’அப்ப நீ யாரையாவது லவ் பண்றியா?சொல்லு ‘’

    ‘’இது வரை யாரையும் காதலிக்கலே அந்த நேரம் வரும்போது சொல்றேன், அது வரை பொறுமையா இருங்க ‘’ சொல்லி விட்டு போனாள்.

    வாயடைத்து நின்றார் சந்தானம் .விதையொன்று போட சுரைஒன்றா முளைக்கும்?

    Share