இலக்கியம்கவிதைகள்

பாடிப்பணிவோம்

சரஸ்வதிராசேந்திரன்

krishna

கொண்டை மயில் சீவி
குழலூதும் கண்ணா
கோபியர் கொஞ்சும்
கோகுல கிருஷ்ணா
மாய லீலை செய்யும்
ஆயர்பாடி கண்ணா
கேட்டதை கொடுக்கும்
கீதையின் நாயகா
குருவாயூரில் நிற்கும்
குழந்தை கண்ணா
மதுராவில் பிறந்து
கோகுலத்தில் வளர்ந்து
துவாரகையை ஆண்டவனே
குன்றம் ஏந்தியே
குளிர் மழை காத்து
பசுக்கூட்டதைக் காத்தவனே
கமலம் போன்றகண்ணா
கண்ணாய் இருந்து காப்பவனே
உன் வேய்குழலின் நாதம்
வீசி வரும் கீதம்
எங்களுக்கு வேதம்
பாடிப்பணிவோம் உன் பாதம்

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    என் கண்ணன் கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி–சரஸ்வதிராசேந்திரன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க