இலக்கியம்கவிதைகள்

பாதப் புகலொன்றே போதுமப்பா

சரஸ்வதிராசேந்திரன்

OLYMPUS DIGITAL CAMERA

 

 

 

 

 

 

 

 

பாதப் புகலொன்றே போதுமப்பா

முதல்வனே மூஷிக வாகனனே

முதல் வணக்கம் உனக்கே ஐயனே

பரமன் கொழுந்தே உமை பாலகனே

பேழை வயிறோனே மோதகப்பிரியனே

 

அழகு முருகனுக்குதவிய ஆசை

அண்ணனே ஆனை முகத்தோனே

அப்பமோடு அவல்பொரி படைப்பேன்

அருள் தருவாய் ஆதி சக்தி மகனே

 

சங்கரன் மகனே சஞ்சலம் தீர்ப்பாய்

சங்கரி மைந்தா உன் தாள்பணிந்தேன்

உத்தமன்உனையேஉறுதியாய்நம்புகிறேன்

பித்தன்எனைஆண்டருள்வாய் பித்தனின் மகனே

 

தொல்வினைகள் தொல்லை செய்யாமலே

தடுத்தென்னை தாங்கி நிற்பாய் ஐயனே

பேரெதுவும் வேண்டாம் புகழ்வேண்டாம்உன்

பாதப்  புகலொன்றே போதுமப்பா  தூயனே

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    என் பாதப்புகலொன்றே போதுமப்பா என்ற கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி-சரஸ்வதிராசேந்திரன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க