இன்றைய சமூகம் !…….

 முனைவர் சு.சத்தியா

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

பான் செக்கர்ஸ் மகளிர்   கல்லூரி, தஞ்சாவூர்.

 

கூடி  வாழ்ந்து  கோடி  நன்மை   பெற்ற

காலம்போச்சு!…

நாடி  எங்கும்  கேடு  செய்யும்

உலகமாச்சு!….

மனிதன  மனிதன்  மதிக்கும்  காலம்

மாண்டுபோச்சு!…

மனிதன்  எங்கே  வசிக்கிறான்? என்ற

நிலையாச்சு!….

அன்பு   என்றால்  என்ன?

என்பதாச்சு!…..

வம்பு  என்பதே  இன்று

வாடிக்கையாச்சு!….

கருணை  என்பது  முதியோர்

இல்லமாச்சு!….

காசு  மட்டுமே  இன்று

வாழ்க்கையாச்சு!..

அது இல்லாதவர் வாழ்வோ

கல்லறையாச்சு!….

உழவனின்   வாழ்வோ

உதிர்ந்துப்போச்சு!….

நாற்பது  பக்க சுயவிவரம்

செல்லாகாசாச்சு!….

நாற்பது  லெட்சம்   கையூட்டே   இன்றைய

நாகரீகமாச்சு!….

இதுதான்   இன்றைய  சமூகம்

என்பதாச்சு!…

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.