நாடில்லாத் தளத்தில் இருப்போன் !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் சி. ஜெயபாரதன், கனடா
நாடில்லா மனிதன் அவன்
நிஜமாகவே !
வாடிக் கிடப்பது அவன் நாடில்லா
தளத்தில் !
தன் நாடில்லா நிலத்தில்
யாருக்கும்
உதவத் திட்டமிட வேண்டாம் !
குறிக்கோள் இல்லை !
போவ தெங்கே என்றும்
அறியான் அவன் !
சிறிதளவு
என்னைப் போல, உன்னைப் போல
இல்லையா அவன் ?
நாடில்லா மனிதா !
நான் இப்போது நவில்வதைக் கேள் !
நீ இழப்பதை அறியாய் !
நாடில்லா மனிதா !
உன் ஆணைக்கடி பணியும்
இவ்வையம் !
குருடன் நீ !
காண விழைவது மட்டும்
கண்முன் தென்படும் !
என்னைத் தெரியுதா உனக்கு ?
நாடில்லா மனிதா ? நீ எதற்கும்
கவலைப் படாதே !
அவசரப் படாதே !
உனது நேரத்தை எடுத்துக் கொள் !
உதவ முன்வரும்
மாற்றான் தோளில் ஏற்றி வை !
நாடில்லா மனிதா !
யாருக்கும்
நாடில்லாத் திட்டம் வேண்டாய் !
நாடில்லாப் பணியைப்
புரியாய் !