எனை ஆளும் தாயே

இராதா விஜயன்
 

 

உன் காலடி கிட்டின்

முன்னம் பிறவிகளும்

மொத்தமாய் விழைவேன்

மொத்தமாய்ப் புண்ணியம் புரிகின்

அம்மையே மொத்தமாய்க்

கைகொள்வேன்

இம்மைக்கும் மறுமைக்கும்

கசிந்துருக விழைவேன்

மாண்பும் அன்பும்

பிணைந்திட உன்

மார்சுரக்கும் பாற்சுவைக்காய்

பசித்திருப்பேன்

தண்குடையே தண்ணிலவே

தீமைக்கோர் தீதாவாய்

தகித்திடும் கால்வயிற்றுக்கோர்

தகைசார் மருந்தாவாய்

என் அம்மையே!

நீ போதும் இப்பிறவிக்கு!

1 thought on “எனை ஆளும் தாயே

  1. அம்மை உன் அருகிலுருக்க உனக்கேன் மனக்கவலை .அடியினை இறுக பற்றிக்கொள் .அவள் அருள் புரிவாள் !!!!!!!!!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க