
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நீ அன்றென்னை அழ வைத்தாய் !
நினைவி ருக்கும் உனக்கு !
ஏனென்று சிந்திப்பதில் பயனில்லை !
நான் அழுதது உனக்காக !
இப்போது நீ மனம் மாறினாய்.
என் மனம் மாறுவதில் பயனில்லை !
நான் அழுது முடித்தேன் .
பழைய பாடல் வரியே நீ சொல்கிறாய்.
ஏனென அறியேன் நான்.
முன்பென்னைக் காயப் படுத்தினாய்.
மீண்டும் காயப் படுத்து கிறாய் !
வேண்டாம் ! வேண்டாம் !
மீண்டும் இரண்டாம் தடவை
வேண்டாம் !
நீ அன்றென்னை அழ வைத்தாய் !
நினைவில் உள்ளதா ?
ஏன் அழுதேன் தெரியுமா ?
என்னை விட்டுச் சென்ற
உனக்காக அழுதேன் !

Leave a Reply