பாஸ்கர் சேஷாத்ரி
இனி எங்கும் செல்ல முடியாது .
ஆணி அடித்த பூமி எல்லா புறமும்
மேலே நீலக்கூரை நாலா பக்கமும்
வந்து வெளியில் வீழ்ந்து விட்டோம்
இல்லாத கரையில் நீச்சல் மட்டும் நிதம் நடக்க
பொல்லாத மனம் பொங்கிப் பொங்கி தினம் வழியும்
தேடி ஒன்றில் லயிக்காமல்
அடுத்தடுத்து ஓடும் ஆட்டமதில்
நிற்பதற்கும் நேரமில்லை – கடக்கவும் முடியவில்லை
என் மூச்சை யாரோ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Leave a Reply