உய்ய்ய்

A young man reflected on a puddle at sunset
பாஸ்கர் சேஷாத்ரி
வாய் திறந்தபடி எல்லாவற்றையும் முழுங்கிக்கொண்டு இருக்கிறது .
ஆளுயுர அலைகள் இதில் ஊழி ஆடி இசை பாடும்
பெருமரங்கள் ஊஞ்சலாடி, தானாகத் தரை படுக்கும்
காமக்காற்று முனை தேடிக் கொக்கரித்து ஆர்ப்பரிக்கும்
பாரம் தாங்கா விண்வெளி நிலம் முற்றும் ஈரம் செய்யும்
அழுத்தம் கொண்ட பூமி கொஞ்சம் தனியாய்த் தான் விலகும்
எழுச்சி மிக்க மலைகள் கொஞ்சம் நின்றபடி புகையும் ஊதும்
வெளிறிப்போன விலங்கினங்கள் இரை மறந்து ஒன்று கூடும்
வெளிச்சப்புகை மீண்டும் வர உலகம் திரும்ப உய்த்து நிற்கும்
காலம் மட்டும் கண்ணயராது காத்திருந்து காவல் செய்யும்