முகமூடி

முனைவர் இரா. பேபி
மடத்துக்குளம்.
அடிமனதின் ஆழத்தில்
மறைந்திருந்து மர்மமாய்
புன்னகைக்கின்றது
மனம்
மூடி வைத்து மூடி வைத்து
மூச்சு முட்டி
வெளியே பிதுங்கி வழிகிறது!
மரித்துப் போன நினைவுகளை
ஜீரணிக்க முடியாமல்
திசைமாறி
விழி பிதுங்கி வழிகின்றது
வெளிப்பட்டால்
குரூரம் வெளிப்பட்டுவிடுமென
பயந்து தவிக்கிறது.
சமூக ஒழுங்குக்கு பயந்து
பலவித ஒப்பனைகளை
பூசி மகிழ்கிறது.
அதுவே நிஜமாகிப் போனதை
அறியாமல் மீண்டும் மீண்டும்
அரிதாரம் பூசி
போலியாக மாறி
வாழப்பழகிக்கொண்டது
தனக்கான முகத்தைக்
வீதியில் தேடி அலைந்து
கேட்பாரற்று கனத்துக்
கிடந்தது மனம்…..