காம யோகா – 3
சி. ஜெயபாரதன், கனடா
(பச்சை விளக்கு)
பச்சை விளக்கு காட்டாமல்
இரயில் எஞ்சின்
நிலையத்தில் நுழைந்தால்
நேரும் விபத்து!
இச்சைக் கொடி காட்டும்
மாதின்மேல்
இசை வீணை மீட்டு!
கனிந்துருகும்
கண்களை உற்றுப் பார் .
பெண்ணின்
காந்த உடலைப் பார்,
தளரும்
அன்ன நடையைப் பார்!
வண்ண
உடையைப் பார்!
பொங்கி எழும் மார்பைப் பார்.
சமிக்கை பளிச்செனத்
தெரிகிறதா?
காம சுரப்பிகள் ஊற்றில்
சேமிப்பாகித்
தாமாய்ப் பொங்காமல்
காம முறுதல் தீது
காரிகை மீது !
பெண் மனதைத்
தேனாய் ஆக்குவதும்,
வீணையாய் இசைக் கானம்
மீட்டுவதும்
ஆடவன் வாயும் விரல்களே!
தேளாய்,
தேனீயாய்க் கொட்டச்
செய்வதும்
ஆடவன் மூடச் செயல்களே!
தனக்கெனத் தேடி வரும்
தேனிலவை,
உனக்கென நாடிவரும்
இணக்க மாதை
இரு கைகளில் அள்ளிக்
காற்று
இடைவெளி யின்றி
கட்டி அணைத்துக் கொண்டு
பிறவிப் பயன்
பெறுவது, இன்பம் அளிப்பது
காமயோகா!
ஆண் பெண் ஆத்ம
நேச நெறிப் பாலுறவு
நீடித்து இருவரை இணைக்கும்
ஆன்மீகப் பாலம்.
ஈருடல் தழுவிக் கொண்டு
தேனூறும்
பலாச்சுளையின்
காமதேனு ஆலயத்தில்
புல்லாங்குழல் இசை பாடல்,
தாய் உயிர் ஈன்று
பிறவி பெருக்கும் இன்பம்
காமயோகா.