‘சா‌மி‌ பு‌ள்‌ள’ படத்‌தி‌ன்‌ கதை

0

sami_pullaமே‌க்‌ஸ்‌ சி‌னி‌மா‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ ஏ.ஜி‌.லோ‌கநா‌தன்‌, செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ ‘சா‌மி‌ பு‌ள்‌ள’. இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌ வசனம்‌ எழுதி‌ இயக்‌குநரா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌ கே‌.ரங்‌கரா‌ஜன்‌. இவர்‌ இயக்‌குநர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வனி‌டம்‌ உதவி‌யா‌ளரா‌க இருந்‌தவர்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பு‌துமுகம்‌ செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌ உள்‌ளா‌ர்‌. இன்னொ‌ரு நா‌யகனா‌க கெ‌ளசி‌க்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌. அஷ்‌மி‌தா‌, சீ‌னா‌ என இரு கதா‌நா‌யகி‌கள்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. மே‌லும்‌ பா‌லா‌சி‌ங்‌, நா‌ன்‌ கடவு‌ள்‌‌ கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. சி‌ல பா‌த்‌தி‌ரங்‌களி‌ல்‌ சா‌யல்‌குடி‌ பகுதி‌யை‌ச்‌ சே‌ர்‌ந்‌த சி‌லரை‌யு‌ம்‌ நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கின்‌றனர்‌.

கி‌ரா‌மத்‌து மணம்‌ வீ‌சும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு ஆர்‌.வே‌ல்‌முருகன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்துள்ளா‌ர்‌. இவர்‌ பி‌ரபல ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ பி‌.சி‌.ஸ்ரீரா‌ம்‌ உதவி‌யா‌ளர்‌ ஆவா‌ர்‌. ஜே‌.கே‌.செ‌ல்‌வா‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ நந்‌தலா‌லா‌, டா‌க்‌டர்‌ கி‌ருதயா‌, தி‌ரை‌வண்‌ணன்‌, கலை‌க்‌குமா‌ர்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌.  எஸ்‌.பி‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யம்‌, அனுரா‌தா‌ ஸ்ரீரா‌ம்‌, கா‌ர்‌த்‌திக்‌‌, தி‌ப்‌பு‌, ஷை‌ந்‌தவி‌, ஹரி‌ணி‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டல்‌களைப்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. கா‌தல்‌ கந்‌தா‌ஸ்‌, கே‌சவன்‌ இருவரும்‌ நடனம்‌ அமை‌த்‌துள்‌ளனர்‌.

நா‌க்அவு‌ட்‌ நந்‌தா‌ சண்‌டை‌ப் ‌பயி‌ற்‌சி‌ அளி‌க்‌க, லா‌ன்‌சி‌ மோ‌கன்‌ படத்‌தொ‌குப்‌பு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. கலை‌ இயக்‌கம்‌ – குமா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ ரா‌மநா‌தபு‌ரம்‌, தூ‌த்‌துக்‌குடி‌, சா‌யல்‌குடி‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது. தற்‌போ‌து பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ர்‌ப்‌பு‌ வே‌லை நடந்‌து வருகி‌றது.

இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ப்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ கே‌.ரங்‌கரா‌ஜன்‌ கூறுகை‌யி‌ல்‌, “முப்‌பது வருடமா‌க மழை‌ பெ‌ய்‌யா‌த ஊருக்‌குள்‌ நடக்‌கும்‌ ஒரு பசுமை‌யா‌ன கா‌தல்‌ கதை‌. இது ஒரு உண்‌மைச்‌ சம்‌பவத்‌தி‌ன்‌ அடி‌ப்‌படை‌யி‌ல்‌ உருவா‌னது. மழை‌ பெ‌ய்‌யா‌த ஊரி‌ல்‌ ஒருவன்‌ இருபத்து ஐந்‌து வருடமா‌கக் குளம்‌ வெ‌ட்‌டுகி‌றா‌ன்‌. தி‌னமும்‌ அவனது வே‌லை‌யே‌ குளம்‌ வெ‌ட்‌டுவதுதா‌ன்‌. மழை‌ பெ‌ய்‌து குளத்‌தை‌ நி‌றை‌த்‌தா‌? அவனது நம்‌பி‌க்‌கை‌ வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌றதா‌?, அவனது கா‌தலுக்‌கு யா‌ர்‌ குறுக்‌கே‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌கள்‌ என யதா‌ர்‌த்‌தமா‌க, அதே‌ சமயம்‌ சுவார‌ஸ்‌யமா‌ன கா‌ட்‌சி‌களோ‌டு படத்‌தை‌ இயக்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌. அனைத்‌துத் தரப்‌பி‌னரும்‌ படத்‌தோ‌டு ஒன்‌றி‌ ரசி‌‌க்‌கும்‌ வி‌தமா‌கப் படம்‌ இருக்‌கும்‌” என்‌றா‌ர்‌.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.