Tag: தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்

  • தேவகோட்டை பள்ளிமாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

    தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    • விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்
    • பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்
    • கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி தாளாளர் அஹ்மத் யாசின் முன்னிலை வகித்தார்
    • விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன் சிறப்புரை வழங்கினார்

    தாளாளர் சேது குமணன் அவர்கள் தமது சிறப்புரையில், 8ம் வகுப்பு மாணவி தனம் மற்றும் 7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி ஆகியோரின் கல்வியின் சிறப்புகளைப் பாராட்டி, உயர் கல்வி வரையிலான படிப்பு செலவைத் தான் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.

    தேவகோட்டை பள்ளி-3

    தேவகோட்டை பள்ளி-4

    பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அவரது கல்லூரியில் மரம் நட்டதைப் பாராட்டி விருது வழங்கினார்.

    தேவகோட்டை பள்ளி-0

    தேவகோட்டை பள்ளி-1

    தேவகோட்டை பள்ளி-2

    விழாவில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய மாணவிகள் தனலெட்சுமி, தனம், ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, ஜெயஸ்ரீ; மற்றும் மாணவர்கள் யோகேஸ்வரன், கண்ணதாசன், முனீஸ்வரன், ஜெகதீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், அனைவருக்கும் விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் தெரிவித்தனர்.

    விழாவினை ஆசிரியை செல்வ மீனாள் தொகுத்து வழங்கினார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் அனைத்து மாணவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருவதாக பெற்றோர்கள் பேசினார்கள்.

    பட விளக்கம் :
    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் சேது குமணன் விருது வழங்கினார்.விருது பெற்ற பள்ளி மாணவர்களுடன் நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி தாளாளர் அஹமத் யாசின் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களின் விளக்கக் காணொளி குறுந்தகடுகள்

    தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களின் விளக்கக் காணொளி குறுந்தகடுகள் வழங்குதல் விழா

    Capture

    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காட்சி வழி இயற்பியலும், கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வந்திருந்தோரைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் வரவேற்றார். பள்ளி செயலர் சோமசுந்தரம் தலைமை தங்கினார். பள்ளிக் கல்வி தலைவர் மீனாட்சி ஆட்சி, கண்ணங்குடி உதவித் தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும், இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் வழங்கிச் சிறப்புரையாற்றுகையில், அறிவியல் இயற்பியல் மிகவும் முக்கியமானது. அதன் மொழி கணிதம். இவை வழி வந்தவையே வேதியியல் மற்றும் ஏனைய அறிவியல் துறைகள்.

    நாமும், நம்முடைய உலகமும், வகிக்கும் சூரிய குடும்பமும், அக் குடும்பம் இயங்கும் இந்த அண்ட வெளியும் அதன் விண்மீன் தொகுதிகளும் கொண்டதே இப் பிரபஞ்சம். அண்ட இயந்திரம் என்ற இப்பிரபஞ்சத்தின் இயந்திரமயமான இயக்கத்தையும் அதற்கு அப்பாலும் உள்ள அறிவியல் உண்மைகள் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மூன்று பகுதிகளாக வழங்குகிறது. இதை முதல் நூலாக அமெரிக்காவில் உள்ள ஆனேன்பெர்க் அறக்கட்டளையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் வெளியிட்டதைத் தொடர்ந்து இவை பரிசுகளையும், பல்வேறு நாட்டு அங்கீகாரத்தையும் உலகளாவிய முறையில் பெற்றுள்ளது. உலக அளவில் பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல நாடுகளில் இயற்பியல் துறையில் சாதனைப் படைத்து கற்பிக்கப்படுகிறது. அதன் தமிழ் வடிவமே நீங்கள் பார்க்கும் இந்த நூல். இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் எழுதித் தயாரிக்கப்பட்டது. இந்த நூல்கள் .அதோடு இந்த நூல்களில் வரும் கேள்விகளுக்கு விடையும் மூன்றாவது பகுதியாக தரப்பட்டுள்ளது.

    ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்று நமது சூரிய குடும்பத் தலைவனைப் போற்றி தனது சிலம்பு காவியத்தை இளங்கோ அடிகள் தொடங்குகிறார். இந்தக் கதிரவன் வரலாறு தான் நம் வரலாறு. அந்த வரலாறு தான் இயற்பியல். அதனை இரு தொகுதிகளாக இப் புத்தகம் விளக்குகிறது.

    முதல் தொகுதி விண்ணில் இயங்கும் பெரிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் செல்கிறது. அதனை ‘இயந்திர அண்டம்’என்ற தலைப்பில் விளக்குகிறது.

    அதனை அடுத்து இரண்டாம் தொகுதி ‘இயந்திர அண்டமும் அதற்கு அப்பாலும்’ என்று பிரபஞ்சத்தில் இயங்கும் மிகச் சிறிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொல்லி செல்கிறது.

    இதனை இளம் வயது மாணவர்களாகிய நீங்கள் நன்றாகப் பார்த்து எதிர்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளாக வர வேண்டும் என்று பேசினார்.

    திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம் என்றும் பேசினார். குறுந்தகடு பெரிய திரையில் வெளியிடப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.அறிவியல் தொடர்பாக காட்சி வழி ஆர்வமூட்டுவதாக இருந்ததாகத் தெரிவித்தனர். விழா நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

    பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காட்சி வழி இயற்பியலும்,கணிதமும் ,அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • கற்பித்தல் எளிது – ஆளுமை பயிற்சி முகாம்

    உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல் இருக்கும்.
    நாம் துருப்பிடித்து அழிவதை விடத் தேய்ந்து அழிவது நன்று.
    நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்.
    வாழ்வியல் பயிற்றுநர் பேச்சு

    தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

     

    தேவகோட்டை

    பயிற்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திர மோகன், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வாழ்வியல் பயிற்றுநர் விஸ்வநாதன் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துப் பேசும்போது ஆசிரியர்கள் அனைவரும் எப்போதும் எளிதாக நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இருக்கலாம்.நீங்கள் முதலில் மாணவர்களுக்குப் புரிவது மாதிரி சொல்லி கொடுங்கள்.

    நாம் பிறந்தது முதல் கேட்க மட்டுமே பழகி உள்ளோம். வார்த்தைகளால் சொல்வதை காதால் மட்டும் கேட்காமல் வார்த்தைகளால் சொல்வதை தாண்டி கண்ணால், மூளையால், இதயத்தால் புரிந்துகொண்டால் சொல்வது நன்றாகப் புரியும். நாம் சொல்வது விரிவாக இருந்தால் கேட்பவர் மனம் சொல்வதை ஏற்கவில்லை என்றால் அடுத்தவர் சொல்லும் தகவல் நமக்குக் கேட்க கூடாது என்று தானாகவே கத்தியைக் காது எடுத்துக்கொள்ளும்.

    மூச்சுதான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.பிடிக்காத வேலையைச் செய்தால் மூச்சு ஈரமாக இருக்கும். உடல் பாதுகாப்பாக இருக்கிறது. உயிர் விகாசமாக இருந்தால் தான் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.நாம் அனைவரும் நமது திறமையை போல் 14 மடங்கு அதிகமாக உழைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள். அவ்வாறு நாம் உழைக்கவில்லை என்றால் நம் உடல் விடும்.அதனால் பல்வேறு நோய்கள் நமக்கு வந்துவிடும்.எனவே நாம் துருப்பிடித்து அழிவதை விடத் தேய்ந்து அழிவது நன்று.

    உடல் உறுப்புகளுக்குத் தேவையான 5 வகை சுவைகள்:
    நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு சுவையை விரும்பும்.மொத்தம் 5 வகையான சுவைகள் நமது உடம்பு நன்றாக இயங்குவதற்குத் தேவைப்படுகிறது. இவைதான் ஐந்து பூதங்கள் என்று அழைக்கப்படுபவை ஆகும். ஆசிரியர்களுக்கு நுரையீரல் நன்றாக இருக்க வேண்டும். நுரையீரல், பெருங்குடல், தோல் ஆகிய உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்பட காரம் சாப்பிட வேண்டும். காது, பல், நகம், சிறுநீரகம் , எலும்பு ஆகிய உடல் உறுப்புகள் உப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். உப்பு என்றால் நாம் சாப்பிடும் உப்பு கிடையாது. இளநீர் போன்ற பொருள் சாப்பிடும்போது சுவை கொடுக்கும் உப்பு ஆகும். கல்லீரல், கண், பித்தப்பை போன்ற உடல் உறுப்புகள் ஆற்றலுடன் செயல்பட புளிப்பு சுவை சாப்பிட வேண்டும். இதயம், மூளை, நாக்கு,ந மது ஈகோ நன்றாகச் செயல்பட கசப்பு, துவர்ப்பு நன்றாகச் சாப்பிட வேண்டும். மண்ணீரல், இரைப்பை, வாய் போன்ற உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்பட இனிப்பு சுவை சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 சுவைகளையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டாலே எந்த பாதிப்பும் வராது. இந்த 5 சுவைகள் காரம், உப்பு, புளிப்பு, நெருப்பு, இனிப்பு ஆகிய ஐந்தும் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, மண் ஆகிய 5 பூதங்களைக் குறிக்கும்.

    ஆசிரியர்கள் அனைவரும் விதைகள் போன்றவர்கள்.விதைகளுக்குள் பல மரங்கள் இருப்பதைப் போல் ஆசிரியர்களும் பல மாணவர்களை வளர்க்கிறார்கள். ஆசிரியர்களால் தான் இந்தச் சமூகத்தை மாற்ற முடியும். எனவே நீங்கள் அனைவரும் உச்ச எல்லை திறனை வெளிப்படுத்திச் செழுமைப்படுத்தினால் உங்களின் வாழ்க்கை உயரத்தைக் கூட்டும் .உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சுவாச பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார். ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் பயிற்சியில் பங்குபெற்றனர். கண்ணங்குடி உதவித் தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் உட்படப் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார்.

    பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாமில் வாழ்வியல் பயிற்றுநர் மதுரை விஸ்வநாதன் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.

    Share
  • பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம்

    தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை செட்டியார் நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல் வித்தைகள் தொடர்பாக பெற்றோரிடம் பேசினார். கூட்டதில் தேசிய திறன் வழி தேர்வில் 4 மாணவர்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவியர் விடுமறை எடுக்காமல் பள்ளிக்கு தொடர்ந்து வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்குப் பெற்றோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருக்குறளை இசையோடு நடனமாடும் நிகழ்ச்சி மாணவிகளால் நடத்தப்பட்டது.
    1 ம் வகுப்பு மாணவ, மாணவியர் பஞ்சபூதம்,கண்டங்கள்,மகாத்மா காந்தி தொடர்பான பாடல்களை தங்கள் மழலை மொழியில் அழகாக பாடிக் காண்பித்தார்கள்,
    1 ம் வகுப்பு திவ்ய ஸ்ரீ தன் சுத்தம் பற்றி ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார்,
    2 ம் வகுப்பு மாணவி தேவதர்சினி பாரதியார் பாடல் பாடினார்,
    2 ம் வகுப்பு மாணவர் வெங்கடராமன் ஒற்றுமை உணர்வு தொடர்பாகவும்,
    3 ம் வகுப்பு கீர்த்தியா திருமுருகாற்றுப்படை பாடலையும்,
    3 ம் வகுப்பு ஜனஸ்ரீ ஜவஹர்லால் நேரு தொடர்பாக ஆங்கில உரையும்,
    6 ம் வகுப்பு ரஞ்சித் தன்னம்பிக்கை கவிதையும்,
    4 ம் வகுப்பு அஜய்பிரகாஷ் நேரம் தவறாமை தொடர்பாக உரையும்,
    7 ம் வகுப்பு ராஜேஸ்வரி தேவராம் பாடலையும்,
    8 ம் வகுப்பு தனம் வள்ளுவர் பற்றியும்,ஆகாஷ் குமார் மாணவரும்,சமுகத்தொண்டும் என்கிற தலைப்பில் உறையும் நிகழ்த்தினார்கள்.
    முன்னாள் மாணவர் நடராஜனின் தந்தை ராமச்சந்திரன் பள்ளியில் தன் மகன் இது வரை பெற்ற அனைத்து சான்றிதழ்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.

    பெற்றோர்கள் உமா மகேஸ்வரி, மீனாள் , காந்தி, லெட்சுமி ஆகியோர் பள்ளியை பற்றிப் பேசினார்கள். ஆசிரியை வாசுகி, முத்து மீனாள் ஆசிரியர் ஸ்ரீதர், கருப்பையா ஆகியோர் மாணவர்கள் தொடர்பாகவும், பெற்றோர்கள் செய்ய வேண்டியது தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்கள்.ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

    Capture

    Capture1

    Capture2

    பட விளக்கம் : IMJ -5748,5731 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாமலை,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சார்ந்த தாமோதரன்

    பட விளக்கம் : IMJ – 5743 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Thanks & Regards,

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனேன்

    அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனேன்
    வேளாண்மை துறை இணை செயலர் செ. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பெருமிதம்

     

    12

    தேவகோட்டை:
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தான் அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனது குறித்து பெருமிதம் கொள்வதாக மாணவர்களிடம் பேசினார்.

    கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவிகளின் அபிராமி அந்தாதி நடனம் மற்றும் திருக்குறள் நடனம் நடைபெற்றது.
    1ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ திருப்பாவையும், திருப்பாவை போட்டிகளில் சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ள 1ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ திருவெம்பாவையும்,
    2ம் வகுப்பு மாணவர் வெங்கட்ராமன் திருமுருகாற்றுப்படை பாடல்களையும்,
    6ம் வகுப்பு மாணவர் ரஞ்சித் தேவாரம் பாடல்களையும் ,
    7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி நன்னெறி பாடலையும் பாடினார்கள்.

    மத்திய கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகநாதன், சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன் ,கோவில்பட்டி தொழில் அதிபர் நாகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், உங்களைப் போன்று நானும் அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் ஆனேன். குட்டிக் கதை ஒன்றைக் கூறி அதன் மூலம் உண்மையாக உழைப்பவனுக்குத் தான் நல்லவை அனைத்தும் கிடைக்கும் என்பதை மிக எளிமையாக மாணவர்களுக்குப் புரிய வைத்தார். ஒற்றுமையே பலம், தன்னம்பிக்கை வழியாகக் கிடைக்கும் வெற்றி, ஆசிரியரை மதிக்கும் பண்பு, பொய் சொல்லாமல் இருத்தல், நல்ல மாணவராக இருப்பதற்கு என்ன, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.

    இயற்கை வேளாண்மை குறித்தும், ஐ.ஏ.எஸ். ஆவதற்கு எப்படிப் படிக்க வேண்டும் என்றும் அதற்கு இளம் வயதிலேயே தினசரி பத்திரிக்கை படிப்பது, பொது அறிவு தகவல்களை வளர்த்துக் கொள்ள நூலகத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பது உட்பட பல்வேறு தகவல்களை விரிவாக எடுத்துக் கூறினார். படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டு அதில் வெற்றி பெற்றால் அரசு வேலை கிடைக்கும் என்றும், ஐ.ஏ .எஸ். போன்ற பணி இடங்களுக்கு நன்றாகப் படித்தால் எளிதாகச் செல்லலாம் எனத் தெரிவித்தார். பாரதியார் பாடல்களை பாடிக் காண்பித்து பொய் சொல்லாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் பலன்களையும் நன்றாக எடுத்து உரைத்தார். பள்ளி நூலகத்திற்கு மாணவர்கள் படிக்கும் வகையில் புதியதாக புத்தகங்களை வழங்கினார். நூலக புத்தகங்களை பார்வையிட்டுப் படித்து பார்த்தார்.

    இணை செயலரிடம் மாணவிகள் தனலெட்சுமி, பிரவீணா, பரமேஸ்வரி, தனம், சந்தியா மாணவர்கள் அபினாஷ், ஈஸ்வரன், ஜெகதீஷ் உட்படப் பல மாணவமாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவிகள், பாடல்கள் பாடிய மாணவ மாணவியர், கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்ற மாணவமாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஸ்ரீதரன், இளங்கோ, சென்னை தொழில் அதிபர் குணசேகரன், தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் ரமேஷ் உட்படப் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடர்பாக ஆசிரியைகள் வாசுகி, சாந்தி, ஆசிரியர் ஸ்ரீதர், பெற்றோர்கள் மகேஷ்,சொர்ணாம்பாள், சீதா லெட்சுமி, சத்துணவு உதவியாளர் கலா உட்படப் பலர் பேசினார்கள். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேரா. கண்ணதாசன் செய்திருந்தார்.

    பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரிடம் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பேசிய போது எடுத்த படம்.

    அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கேள்விகளும், தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களின் பதில்களும் …

    பரமேஸ்வரி : தமிழ்நாட்டில் எத்தனையோ அரசுத் துறைகள் இருக்கும்போது நீங்கள் ஏன் ஐ.ஏ .எஸ். பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள் ?

    பதில் : மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்பணியைத் தேர்ந்தெடுத்தேன்.

    பூவதி : சிறந்த உரம் எது ?

    பதில் : இயற்கை உரம்தான் சிறந்த உரம்.

    மகாலெட்சுமி : 50 ஆண்டுகள் கழித்து இந்தியா எப்படி இருக்கும்?

    பதில்: மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும்.

    சந்தோஷ் : படிக்கிற எல்லோர்க்கும் அரசாங்க வேலை கிடைக்குமா?

    பதில் : படிக்கிற அனைவரும் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்றால் கண்டிப்பாக அரசாங்க வேலை கிடைக்கும்.

    காயத்திரி : நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்கள் ?

    பதில் : உங்களைப் போன்று நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனது குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

    பிரவீணா : ஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும் ?

    பதில் : பள்ளிப் பருவத்தில் இருந்தே நன்றாகப் படிக்க வேண்டும். பிறகு கல்லூரியில் படித்து ஐ.ஏ .எஸ். போட்டி தேர்வு எழுத வேண்டும். பள்ளிப் பருவத்தில் இருந்தே தினசரி ஆர்வத்துடன் பத்திரிக்கைகள் வாசிக்க வேண்டும். பொது அறிவு தொடர்புடைய புத்தகங்கள் அதிகமாக வாசிக்க வேண்டும். அவற்றை நினைவில் நிறுத்த வேண்டும். பிறகு போட்டி தேர்வுகளில் பங்கேற்று நம்பிக்கையுடன், மனஒருமைப்பாட்டுடன் தேர்வு எழுதினால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ .எஸ். ஆக முடியும்.

    தனலெட்சுமி : ஐ.ஏ.எஸ். ஆக நீங்கள் ஆசைப்பட்டீர்களா ? அல்லது உங்கள் அப்பா, அம்மா ஆசைப் பட்டார்களா ?

    பதில் : ஐ.ஏ .எஸ். ஆகி பொது மக்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்ய வேண்டும் என்பது எனது மனதுக்குள் ஆர்வம் இருந்ததுடன், எனது பெற்றோரும் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து மனத்திடத்தை, நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தனர். குழந்தைப் பருவத்திலேயே எனது பெற்றோர்கள் என்னை நன்கு படிக்க சொல்லி ஆர்வமூட்டினார்கள். அத்துடன் எனது ஆர்வமும் இணைந்து இந்த வெற்றியைப் பெற முடிந்தது. பெற்றோர்கள் மற்றும் எனது முயற்சி, பயிற்சியின் கூட்டு முயற்சிதான் இந்த வெற்றிக்குக் காரணம்.

    ஜெகதீஸ்வரன் : நீங்கள் எந்த வருடம் ஐ.ஏ.எஸ். ஆனீர்கள் ?

    பதில் : 2008ம் வருடம் .

    இது போன்று பல்வேறு கேள்விகளை கேட்டு மாணவர்கள் பதில் பெற்றனர்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்

     

    தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள், ஜெர்மனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளே , தங்க நகையே அணியாத நாடு ஜெர்மன், வாழ்க்கையில் கல்வி தான் நண்பன் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர் பேச்சு

     

    suba3

    தேவகோட்டை:
    “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்,’ என ஜெர்மனி ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரெம்மல் பேசினார்.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.

    விழாவில் தமிழ் மரபு அறக் கட்டளை துணைத்தலைவரும் , கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான ஜெர்மனியில் வசிக்கும் மலேசியத் தமிழர் சுபாஷினி ட்ரெம்மல் மாணவர்களிடையே பேசுகையில், “”தமிழகத்திற்கு ஒரு முறை வந்தபோது, கல்வெட்டுகளில் கிறுக்கல்கள் இருந்தது. அதில் உள்ளதைப் படிக்க முயற்சித்தபோது கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது. ஜெர்மனியில் இலத்தீன் மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள பாடபுத்தகங்கள் பெரிய அளவிலும், பெரிய படங்களுடன் உள்ளன. ஜெர்மனியில் எல்லா பள்ளிகளும் அரசுப் பள்ளிகள்தான். ஆங்கிலம் வந்ததற்கு ஜெர்மன் மொழிதான் காரணம். பள்ளிகளில் வகுப்புகள் 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு எனவும்,பிறகு விரும்பிய பாடங்களை படிக்கும் வண்ணமும் வகுப்புகள் இருக்கும். 5 வது வகுப்புக்கு இரண்டாவது மொழியாக இத்தாலி, இலத்தீன் என எதையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

    suba2

    பிறகு, ஜெர்மனியில் வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என நான்கு பருவ காலங்கள் உள்ளன. ஜெர்மனியில் கோதுமை, கம்பு, சோளம், கடுகு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கடுகில் இருந்து எண்ணெய், எரிவாயு தயாரிக்கப்படுகிறது. அங்கு 800 ஆண்டுகள் பழமையான கீல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ட்ரையர் என்ற பழமையான தேவாலயம் உள்ளது என்றார். மாணவ மாணவிகளுக்கு ஜெர்மனிக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தமிழகத்திற்கு இது வரை 16 முறை வந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் மிகவும் பிடித்த இடம் திருவண்ணாமலை அருகே சமண கோவில் உள்ள திருமலை என்கிற இடம் தான் என்று கூறினார். ஜெர்மனியில் பிடித்த இடம் பெர்லின் எனக் கூறினார்.

    தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அனைவரும் நல்ல நிலைமைக்கு வர இயலும் என்று கூறினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பது பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும். யாரேனும் குப்பையைக் கொட்டினால் அதை எடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்றார்.

    suba1

    தனலெட்சுமி, பரமேசுவரி, சௌமியா, சந்தியா, காயத்திரி, முனிஸ்வரன், ஜெகதீஸ்வரன், அய்யப்பன் உட்படப் பல மாணவ, மாணவியரின் கேள்விக்கு பதிலளித்தார். விழாவில் எல்.ஐ.சி., மேனாள் கோட்ட மேலாளர் வினைதீர்த்தான், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலட்சுமி, திருச்சி கடல் ஆராய்ச்சி மாணவர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசினர். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

    பட விளக்கம் :
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டுத் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷிணி ட்ரம்மல் மாணவர்களுடன் ஜெர்மன் நாடு தொடர்பாக கலந்துரையாடினார்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • பெற்றோர் சொல்கேட்டு நடக்க மாணவர்கள் உறுதிமொழி

    அகம் ஐந்து, புறம் ஐந்து மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சி
    அம்மா, அப்பா சொல்வதை நன்றாகக் கேட்போம் மாணவர்கள் உறுதி.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அகம் ஐந்து, புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சி நடைபெற்றது.

    Chairman

    பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை நிகில் அமைப்பின் மண்டல பயிற்சியாளர் திரு. திரு. தயானந்தன் மாணவர்களுக்கு ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சி அளித்தார்.
    அகம் ஐந்து என்கிற தலைப்பில் …
    1. அன்பு செலுத்துதல்,
    2. பொறுப்புணர்வு,
    3. ஒற்றுமை,
    4. நேர்மை,
    5. பிறர் நிலையில் இருந்து பார்த்தல்
    என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும்;

    புறம் ஐந்து என்கிற தலைப்பில் …
    1. கவனித்தல்,
    2. பாராட்டுதல்,
    3. ஆழமான சிந்தனை,
    4. ஆக்க சிந்தனை,
    5. கோபத்தைக் கையாளுதல்
    என்கிற 5 பண்புகள் தொடர்பாகவும் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், பல்வேறு விளையாட்டு முறையின் மூலமாகவும் எடுத்து விளக்கினார்.

    மாணவ மாணவியரைப் பல குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயிற்சி அளித்தார். குழுக்களுக்குள் எவ்வாறு ஒற்றுமையைக் கொண்டு வருவது என்பதைச் செயல்கள் மூலம் செய்து நேரடியாக விளக்கம் அளித்தார். அடுத்தவர் நிலையை உணர்ந்து கொள்ளுதல் சார்பாகப் படங்களும் போட்டுக் காண்பிக்கப்பட்டது. பெற்றோர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதும் தெளிவாக சில படங்களின் வழியாகக் காண்பிக்கப்பட்டது.

    இதனைப் பார்த்த பெருவாரியான மாணவியர்கள் தங்கள் அம்மாவும் இது போல்தானே கஷ்டப்பட்டு நம்மைப் படிக்க வைக்கின்றனர் என்று கண்ணீர் விட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்து அழுதனர். இனிமேல் நாங்கள் அம்மா, அப்பா சொல்வதை நன்றாகக் கேட்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். ஆளுமை தன்மை தொடர்பாகச் சக்தி, முத்தழகி, செந்தில், நந்தகுமார், காயத்திரி, முனீஸ்வரன் உட்படப் பல மாணவ மாணவியர் சந்தேகங்களைக் கேட்டு பதில் பெற்றனர். பயிற்சியின்போது பல்வேறு மாணவ மாணவியர் இது வரை தாங்கள் தெரியாமல் பொய் சொன்னது உண்டு என்றும் இனிமேல் பொய் சொல்ல மாட்டோம் என்றும், நல்ல செயல்களையே செய்வோம் என்றும் பேசினார்கள்.
    நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

    பட விளக்கம்:
    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயிற்சியினை மண்டல பயிற்சியாளர் திரு. தயானந்தன் பயிற்சி கொடுத்தார்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share