கல்பனா சேக்கிழார்

கடந்த 12 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், கணினி, மொழியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டமும் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதுவரை ஆறு நூல்களும், 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 52 தொகுப்பு நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியும் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF) மேற்கொண்டு வருகிறார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.