Author Archives: அண்ணாகண்ணன்

என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார், தபோவனம் சுவாமி ஞானானந்தா அவர்களைப் பாடி, இரண்டு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. அகில இந்திய வானொலி நிலையக் கலைஞர். இவரது மரபணுக்களிலேயே இசை மரபு வளமாக உள்ளது. இந்தப் பதிவில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் முத்தைத்தரு பாடலைச் செல்வி நேத்ரா ஜெயராமனின் தித்திக்கும் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

என் தெய்வீக அனுபவங்கள் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 5

தைப்பூசத்தை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது தெய்வீக அனுபவங்களைப் பகிர வேண்டினோம். சிவன் கண்சிமிட்டியதில் இருந்து, காசியில் கஞ்சா அடித்துச் சிவனைக் காண முயன்றது வரை பற்பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பேட்டியின் இறுதியில் நமக்காக முருகன் ஓவியம் ஒன்றை, நம் கண்முன்னே சில நிமிடங்களில் வரைந்து அளித்தார். நேயர்களுக்கு இந்த ஓவியத்தைப் பரிசாக வழங்க உள்ளோம். இதற்கென போட்டி ஒன்றை அறிவித்துள்ளோம். மேலும் விவரங்களைப் பேட்டியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றிவேல், வீரவேல். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, ...

Read More »

உண்மைச் சம்பவம் 3 – மும்பைப் பேருந்தில்

அண்ணாகண்ணன் மும்பைப் பேருந்தில் எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை இங்கே பகிர்ந்துள்ளேன். பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பொங்கல் கோலங்கள்

தொகுப்பு – இயேகாம்பரம் மார்கழிக் கோலங்களை அடுத்து, பொலிவுமிகு பொங்கல் கோலங்களின் அணிவரிசையைப் பாருங்கள். கோலம் என்பது கலை வெளிப்பாடு மட்டுமில்லை. அது ஒரு ஊடகமும் கூட. அதன் வழியே கருத்துகளையும் செய்திகளையும் நம் வாழ்த்துகளையும் கூடத் தெரிவிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மட்டுமில்லை, நம் வாசலைக் கடந்து செல்லும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். பொங்கலோ பொங்கல்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

படக்கவிதைப் போட்டி – 293

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் ஆர். கே. லக்ஷ்மி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ...

Read More »

மேன்மைகள் சூழ்க!

மேன்மைகள் சூழ்க! மெய்ப்பொருள் காண்க! வாய்மை வெல்க! வல்லமை திகழ்க! உண்மை ஒளிர்க! ஒருமை கூர்க! வண்ணம் பொலிக! வாழ்க வாழ்க! பாடல் இயற்றியவர் – அண்ணாகண்ணன் பாடியவர் – கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

திருப்பாவை – 30 வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த | ஸ்வேதா குரலில் பாற்கடலைக் கடைந்த பரந்தாமனுக்காகத் தமிழ்ப் பாக்கடலைக் கடைந்து, திருப்பாவை எனும் அமுதம் தந்தவர் ஆண்டாள். தாமரைப் பூவிதழ்களால் பூமாலை தொடுத்து, ...

Read More »

நாணயங்கள் காட்டும் நாடுகள்

நாணயங்கள் வழியாகவே உலகம் சுற்றலாம். ஒவ்வொரு நாட்டையும் காணலாம், அந்த நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம், புரிந்துகொள்ளலாம். இதோ, நம் முன்னால் எட்டு நாடுகள். சிற்றுலாப் போகலாம், வாருங்கள்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

திருப்பாவை – 29 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே | ஸ்வேதா குரலில் கோவிந்தா, சிற்றஞ்சிறு காலையிலே வந்து உன்னைச் சேவிக்கின்றோம். உன் பொற்றாமரை அடியைப் போற்றுகின்றோம். உனக்குச் சேவகம் செய்யும் வாய்ப்பை வழங்கு. இந்தப் ...

Read More »

திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

திருப்பாவை – 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச் சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய் திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று | ஸ்வேதா குரலில் மாலே, நெடுமாலே, மணிவண்ணா, ஆழி மழைக்கண்ணா, பூவைப் பூவண்ணா, மலர்மார்பா, கோவிந்தா… எனத் திருப்பாவை முழுவதும் கண்ணனை ஏக வசனத்தில் ஆண்டாள் ...

Read More »

கூட்லு அருவியை நோக்கி

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கூட்லு அருவியை இன்று காண்கின்றோம். கூட்லு தீர்த்தம் என அழைக்கப்படுகிற இந்த அருவி, உடுப்பியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்த்தியான கூட்லு காட்டுக்குள், கரடு முரடான பாதை வழியே சென்றால், இந்த அருவியைக் காணலாம். 300 அடி உயரத்திலிருந்து தண்ணீர் செங்குத்தாக விழுகின்றது. இந்தத் தண்ணீர் ஆறாக ஓடும் இடத்தில் படகிலும் செல்லலாம். இந்த வசீகர அருவியை நமக்காகப் படமெடுத்து வந்திருக்கிறார், காயத்ரி சேஷா. Image Courtesy: Wikipedia (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் ...

Read More »

திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

திருப்பாவை – 27 கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும் | ஸ்வேதா குரலில் நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் எனப் பாடிய பாவையர்கள், பாவை நோன்பு நோற்று முடிக்கும் தறுவாயில், பாற்சோறு உண்போம், முழங்கை வழிய நெய்யுண்போம். ...

Read More »

நான் ‘கமர்சியல் ஆர்டிஸ்ட்’ தான் – ஓவியர் ஸ்யாம் – 4

சந்திப்பு: அண்ணாகண்ணன் “நான் ‘கமர்சியல் ஆர்டிஸ்ட்’ தான். மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே என் குறிக்கோள்” என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் ஓவியர் ஸ்யாம். சமகால ஓவியர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ரசிகர்கள், பேஸ்புக் நண்பர்கள் ஆகியோருடனான அனுபவங்களையும் மனம் திறந்து பேசுகிறார். டிஜிட்டல் ஓவியங்கள், பேஸ் ஆப், வரையும் கருவிகள் உள்பட ஓவியத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்த தன் பார்வையையும் பகிர்ந்துகொள்கிறார். எங்கள் வாழ்க்கையை உங்கள் ஓவியங்களில் காண்கிறோம் எனக் கசிந்துருகும் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற ஸ்யாம், இதோ நம் முன்னே.   (அண்ணாகண்ணன் யூடியூப் ...

Read More »

திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

திருப்பாவை – 26 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா | ஸ்வேதா குரலில் திருப்பாவையின் முந்தைய பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்றும் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் என்றும் சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன் ...

Read More »