Alert: அடையாற்றின் கரையில் உடைப்பு
அடையாறு நதியின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றிலிருந்து மேற்குத் தாம்பரம், பெருங்களத்தூர், வரதராஜபுரம், பாலாஜி நகர், குட்வில் நகர்… என இதைச் சுற்றியுள்ள 20 ஊர்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கால்வாய்களில் நீர்மட்டம் ஏறி, கரைகளை மீறி நாலாபுறமும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சாலைகளை மூழ்கடித்து, வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரை உடைந்துள்ள பகுதியை இங்கே பார்க்கலாம். தாம்பரம் பெருநகராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து, கரையை அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)