எஸ்.நெடுஞ்செழியன்

தளிராக
இருந்த  எனக்கு
உரமிட்டு -உயிர்த் தண்ணீரும்  விட்டீர்கள்..
வளர்ந்து  மொட்டுக்கள் விட்டேன்
ஒரு நாள் ……..மொட்டுக்கள்  மலர்ந்தது .
மலர்ந்ததும் ….
மகிழ்ச்சியுடன்  பறித்து
தலையில் வைத்துக் கொண்டீர்கள்;
மகிழ்ந்தேன் ……..வலியையும்  மறந்து.
மறுநாள்..
காய்ந்த  மலரை ……என் மலரை
என் காலடியில்  வீசினீர்கள் .
கதற முடியவில்லை ….
கண்ணீர்  சிந்த முடியவில்லை ….என்னால்
நீர்
எனக்கு
நீர்  விட்டதால்
நான் மௌனமானேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *