இரத்த வகைக்கேற்ற உணவு ! (Blood group diet)

உமா சண்முகம்

உடல் பருமன் என்பது நோய்களுக்கான வரவேற்பு வளைவு.உடல் பருத்துவிட்டால் இதய நோய்கள் ரத்த அழுத்தம் நீரிழிவு பக்கவாதம் என உடலே நோய்க் கிடங்காகிவிடும்.

உடல் பருமனுக்கு முதன்மையான காரணம் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம்தான்.  நம் முன்னோர்கள் காய்கறி பழங்கள் தானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். உழைப்பும் கொழுப்பும் சரி விகிதத்தில் இருந்ததால் களைப்பில்லாமல் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்.ஆனால் நாம் மரபு ரீதியான பல உணவுகளை மறந்து விட்டோம்.

மனித இறப்புக்கான முதல் 10 காரணங்களில் காய்கறி பழம் உட்கொள்ளாததும் ஒன்று என்கிறது உலக சுகாதார மையம். ஆண்டுதோறும் ஏற்படும் 27 லட்சம் பேர்களின் மரணத்தை பழங்கள் காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் தடுத்து நிறுத்த முடியுமாம்.

ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்கு பழங்கள் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்டாலும், ஒவ்வொருவரின் விருப்ப உணவும் வித்தியாசப்படுவதும் இயற்கை அல்லவா? ஒருவருக்கு சைவ உணவும், மற்றொருவருக்கு அசைவ உணவும், ஒருவருக்கு பால் பொருட்களும், மற்றவருக்கு காய், கனிகள் என்றும் இப்படி மிகவும் வித்தியாசப்படத்தானே செய்கிறது? இதற்கு காரணமாக அவரவர் இரத்த வகைக்கு ஏற்றவாறு அவர்களின் விருப்பமும் மாறுபடுமாம்!

எடுத்துக் காட்டாக, உங்க ரத்த குரூப் ’ஓ’ என்றால் உங்களுக்கு வறுத்த நிலக்கடலை முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு பட்டர் பீன்ஸ் மீன் டோபு ரோஸ்ட் சிக்கன் குறைந்த கொழுப்பு யோகர்ட் சோயா பால் முதலியவைகளை ஒரு பிடி பிடிப்பீர்கள் சரியா?

நீங்கள் ஏ குரூப் இரத்த வகைக்காரரா ? அப்படியென்றால் நீங்கள் சாம்பாரில் ஆரம்பித்து சட்னி துவையல் பருப்பு பொடி நார்த்தங்காய் ஊறுகாய் வற்றல் வடகம் அப்பளம் என்று சைவ உணவை பார்த்து பார்த்து ருசிப்பவர் நீங்கள்.

பி குரூப் காரர்களுக்கு எல்லா வகை உணவுகளும் பிடித்தமானவைதான். இருந்தாலும் பால் பொருட்களில் அதிக ஈடுபாடு இருக்கும்.ஐஸ்கீரிமில் ஆரம்பித்து புதுப் புது பால் உணவுகளின் டேஸ்ட் பிரியர்கள்.

சைவ உணவுகள் பால் பொருட்களில் சரிசமமாக ருசிபார்பவர்கள் ஏபி குரூப் ரத்த வகைக்காரர்கள்.என்ன இது ரத்த குரூப்பில் கூடவா இந்த வித்தியாசம் என்று நாம் வியக்கலாம். இந்த கம்ப்பியூட்டர் காலத்தில் ரத்த குரூப்புக்கு ஏற்ற டயட்களேவந்துவிட்டது.

ப்ளட் குரூப் டயட் என்றால் என்ன?

உங்கள் வயது உடல் பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு ப்ளட் குரூப்பை அடிப்படையாகக் கொண்டு புரோட்டீன், குறைந்த கொழுப்பு, கார்போஹைடிரேட் உணவு வகைகளில் எவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று நிர்ணயிப்பதுதான் இந்த பிளட் குரூப் டயட்.

இந்த புது டயட் முறை வந்தததும் அமெரிக்காவில் பலரும் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிவிட்டனராம். இரத்த அழுத்தத்திலிருந்து கேன்சர் வரை இந்த டயட்டை எதுவும் அண்டாது, இதில் டேஸ்ட் கண்டுவிட்டால் சாக்லெட் பிட்சாபர்கரில் நாட்டம் செல்லவே செல்லாது, என்கின்றனர் டயட்டீசியன்கள்.

ஒவ்வொரு ப்ளட் குரூப்பை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனி ஆன்டிஜன் உள்ளது. இந்த இரசாயன பொருள்தான் உடலின் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கிறது.ப்ளட் குரூப் டயட்கள் இந்த ஆன்டிஜனில் தான் கைவைக்கின்றன.இந்த ஆண்டிஜன் உள்ள இரத்த வகை ஆட்களுக்கு இந்த வகை உணவு சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த வகை இரத்த வகை உணவு வகைகளைப் பின்பற்றினால் முதலில் உடற்பருமன் போய் விடும்.இதுபற்றி அமெரிக்க நிபுணர் பீட்டர் ஆடம் ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.” Eat right 4 your type ” , என்பது இந்த நூலின் பெயர்.

அமெரிக்காவில் பலரிடம் இந்த டயட் புத்தகம் வேத புத்தகமாக உள்ளது.  இந்தியாவிலும் இந்த ப்ளட் குரூப் டயட் நுழைந்து விட்டது.இப்போதைக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் நடிகர்களிடமும் உள்ள இந்தப் பழக்கம் மும்பை பணக்காரர்களிடமும் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது. தெற்கு பக்கம் இந்த காற்று கூடிய விரைவில் அடிக்கும்.

மொத்தத்தில் ப்ளட் குரூப் டயட் என்று ஒரு சூப்பர் வியாபாரம் வலம் வரப் போவது மட்டும் உறுதி.

படத்திற்கு நன்றி

slim girl

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *