சம்திங் சம்திங் வித் சூர்யா – தொலைக்காட்சி நிகழ்ச்சி
நடிகர் சூர்யா பங்கு பெற்ற சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ் ஞாயிறு காலை 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்.
பாலிமர் தொலைக்காட்சியின் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ்.
இதில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நேயர்களுக்கும், சூர்யாவின் ரசிகர்களுக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னுடன் பணிபுரிந்த சக கலைஞர்களைப் பற்றியும், தன்னை உருவாக்கிய இயக்குநர்கள் பற்றியும் மனம் திறக்கிறார் சூர்யா. சூர்யாவின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கும் அவருடைய காதல் மனைவி ஜோதிகாவைப் பற்றியும் தன்னுடைய செல்லக் குழந்தைகள் பற்றியும் சிலாகிக்கிறார்.
நிகழ்ச்சியின் இடையே சூர்யாவின் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளும் அதற்கு சூர்யா தரும் விளக்கங்களும் நேயர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். நகைச்சுவை நடிகர் ஜெகன் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் என்பதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.