‘இபிகோ’ ஆக மாறிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு – திரைச்செய்திகள்
சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான எல்லாம் அவன் செயல் கூட்டணியின் அடுத்த படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ இப்போது ‘இபிகோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, வடிவேலு நடிப்பில் வெளியான படம் ’எல்லாம் அவன் செயல்’. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆர் கேவுடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ்.
இந்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘அப் தக் சப்பன்’ என்ற படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற பெயரில் படமாக்கி வந்தனர். ஆர்கேதான் ஹீரோ. விவேக் இந்த முறை அவருடன் கைகோர்த்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் தலைப்பு ‘இபிகோ’ என மாற்றப்பட்டுள்ளது.
“தலைப்பு சுருக்கமாகவும், கதையின் மையக் கருவை பிரதானப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்று விரும்பினோம். எனவே இபிகோ என மாற்றியுள்ளோம். இந்தத் தலைப்பு இன்னும் கச்சிதமாகப் பொருந்திவிட்டது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது,” என்றார் படத்தின் நாயகன் ஆர்கே.
படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.