ஜெயகாந்தனின் 87ஆவது பிறந்த நாள்

தன் எழுத்துகளால் சமூகத்தில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியர், ஞானபீட விருது பெற்றவர், கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர், எந்தக் கருத்தையும் துணிவுடன் உரைக்கும் ஆளுமை படைத்தவர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஜெயகாந்தன். அவருடைய 87ஆவது பிறந்த நாளான இன்று, அவரது குரலைக் கேளுங்கள். உடன் உரையாடுபவர், மூத்த பத்திரிகையாளர் சுகதேவ்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

About அண்ணாகண்ணன்

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.

One comment

  1. பண்பாளர்களின் உயர்ந்த மனநிலை மற்றும் பரிபக்குவம் குறித்த அருமையான நேர்காணல். பொவாக நேர்காணல் செய்பவர்கள ;தொடர்களை அதாவது வினாக்களை தொடுப்பதற்கு முன்னால் இயலாமை காரணமாகவோ வேறு எது காரணமாகவோ இழுக்கும் சில அசையொலிகளைத் தவிர்த்திருக்க வேண்டும். இது இவருக்கு மட்டுமன்று, தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்போர் தகவல் தரும் நண்பரிடம் வினவ அவர் பேசுவதைக் கேட்டால் ;நன்கு புரியும் ” வந்து:, வந்துட்டு பாத்திங்கன்னர், அதுல வந்து ம் ம் ம் ம் அ அ அ ஆ ஆ ஆ அ ம் ம் அதுல வந்து” என்பன போன்ற ஒலிகள் வருவதைக் ;கேட்டிருக்கலாம். அது மிகவும அருவெறுப்பாக உணர்கிறேன். தற்காலத்தில் உள்ள அறிவியல் வசதிகளில் அந்த வெற்றொலிகளை அலலது வெற்றசைகளைக் களைந்து பிறகு பதிவிடடிருக்கலாம். நேர்காணல் செய்பவர் ஒரு முறை செவிமடுத்தால் இந்தப பதிவின் ஆதங்கம் புரியக் கூடும். எது எவ்வாறாயினும் பயனுள்ள வரலாற்றுப் பதிவு!, நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க