வையக வடிவே

சரஸ்வதி ராசேந்திரன்
அன்னை பராசக்தி அருள்மகனே
முன்னை வினைகளைக் களையவா
வல்வினை எல்லாம் வலுவிழந்தே
வாடிடச் செய்வாய் வல்லபைநாதா
அஞ்சிடும் அன்பருக் கபயமளித்திடு
நஞ்சுள்ளம் கொண்டோரை நசுக்கிவிடு
அனுதினம் பணிவோம் உன்னை
அடைக்கலம் நீயே அன்னைகுமரா
அவலும் பொரியும் நான்படைப்பேன்
அல்லல் தீர்ப்பது உன்கடனே
சங்கரன் புதல்வா சக்திமகனே
சஞ்சலம் தீர்த்திடச் சீக்கிரம்வா
வையகம் யாவும் உன்வடிவே
மானிடம் வாழ்ந்திட மனதுவையே