சௌந்தர்ய லஹரி – 11 | ஸ்ரீ சக்கரம்
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினொன்றாவது ஸ்லோகம். ஸ்ரீ சக்கரம் என்பது ஒரு வரைபடம். இன்னின்ன வழிகளில் சென்றால், அம்பிகையை அடையலாம் என்று வழிகாட்டும். இதன் மையத்தில் உள்ள புள்ளியில்தான் சிவ காமேஸ்வரி, காமேஸ்வரனுடன் கூடி லயித்து, ஒன்றி எழுந்து அருளுகிறார். இங்குதான் படைப்புத் தொழில் நடக்கிறது. இங்குதான் அந்தப் பேரானந்த நிலை கிட்டுகிறது. சிற்றின்பத்தை விட அதி அற்புதமான இந்தப் பேரானந்த நிலையை நாம் எப்படி எட்டுவது?
உன் உடலில் இந்த இந்தத் தளங்களில் இது இது இருக்கிறது. அவற்றை எல்லாம் கடந்து, இன்னின்ன வழிகளில் வந்து, மேல்நோக்கி உன்னை உயர்த்திக்கொண்டே வந்தால், இந்த நிலையை நீ அடைவாய் என்று சொல்வதே ஸ்ரீ சக்கரம். ஆதி சங்கரரின் மனத்தில் தோய்ந்து, இந்த ஸ்ரீ சக்கரத்தை நுணுக்கமாக எளிய தமிழில் விவரிக்கிறார் மதுமிதா. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என உலகோர் உய்ய ஓர் அரும்பொருளை விளக்கியிருக்கிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)