கோடுகளாலான வரைபடம்
மதியழகன்
ஊர்கோலங்கள்..
வேளா வேளைக்குச்
சோறு கிடைத்தால்
சாதிக்கத் தோன்றுமா..
நிலையில்லாத உலகத்தில்
நிரந்தர வேலை கிடைத்துவிட்டது
என்று சொன்னால்
சிரிக்கத் தோன்றாதா!!
குழந்தைகளுக்குக் கூட
முகமூடி அணியாத முகத்தைக்
காட்ட மாட்டீர்களா?
கங்கையில் முங்கி எழுந்தால்
பாவக்கறை படிந்த
மனது தொலைகிறதா..
பொய்யை
திரும்பத் திரும்பச் சொன்னால்
மெய்யாகிவிடுமா,
உண்மையின் பாதையில்
பயணிப்பவர் எத்தனை பேர்
என்று உங்களுக்குத் தெரியுமா?
இல்லையென்றால்
அது வாழ்க்கையாகுமா?
இரக்க சுபாவம்
கொண்டுவிட்டால்
சபிக்கத் தோன்றுமா.?