கவியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘எனக்கென்ன மனக்கவலை?’ என்ற பாடல், புகழ்பெற்றது. இந்தப் பாடலை, ஆர்.வரதராஜன் பாடக் கேளுங்கள். 67 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கேள்வி ஞானத்தில் பாடுவதாகச் சொல்கிறார். இவரது பாடலைக் கேட்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.