உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரினாவில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமே இல்லை. அண்மையில் அங்கே சென்ற சுதா மாதவன், தெறிப்பான சில காட்சிகளைப் படம்பிடித்து, அவரே படங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். செலவே இல்லாமல் இயற்கையை அனுபவிக்க, கொண்டாட, வரம் போல் கிடைத்த வாய்ப்பு இது. இயல்பான இந்தக் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.