கண்ணாடி-புறமும், அகமும்
பாகம்பிரியாள்
புறம்
முகம் எடுப்பாய் இருக்க வேண்டுமென்று என் முகக்கண்ணாடி பார்த்து
முன்னூறு தடவை தலை வாரிக் கோதுகிறாய் உன் கூந்தலை.
மகிழ்ச்சியின் ரேகைகள் உன் முகமெங்கும்!
அகம்
வாரல் ஒவ்வொன்றிற்கும் இதயத்தில் விரிசல்கள்
வரிசையாய் விழுவதை நான் மட்டுமே அறிவேன்!
காதலின் பிம்பங்கள் சிதறிக் கிடக்கிறது என் அகமெங்கும் !
படத்திற்கு நன்றி: http://www.flickr.com/photos/osmann/4896795304/in/photostream