சி. ஜெயபாரதன், கனடா.

இமயத் தொட்டிலை ஆட்டி
எப்படி  எழும் பூகம்பம் ?
பசிபிக் தீவுகளில்
குப்பென
எப்படிக் குமுறிடும்
எரிமலை ?
பூமியின் உட்கருவிலே
தீக்குழம்பை
ஈர்ப்புக்கு எதிராய்
பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்
அசுர அணு உலை ஒன்று
எப்படி உருவானது ?
ஆழ்கடல் அடியில் பன்னூறு
அணுகுண்டு வெடித்து
அசுரச் சுனாமிப் படை
அலைகள்
எப்படிக் கரையேறி
அழிக்கும் ?

தாயின் கர்ப்பப் பையில்
அற்புதச்  சிசு
எப்படி உருவாகுது,
பத்து மாதம் வளர்ந்து?
மாங்கனி, பலா, வாழை,  ஆப்பிள்
தேங்காய், கரும்பு, திராட்சை,
மாதுளை, பீச்சு, பேர்
கனி வகைகளில்
எப்படித் தனித்தனிச் சுவை தரும்
இனிப்புச் சாறு சுரக்குது ?
பற்பல வண்ணங்களில்
வானில்
பறக்கும் புள்ளினம்
எப்படித் தோன்றின?

பிரபஞ்சத்தில்
நியூட்டன் புற இயக்கி
இன்றி,
எல்லா வகை
அக இயக்கிகள்
எப்படி வினையாற்றும்?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நியூட்டன் புற இயக்கி!

  1. தோன்றாது எதுவும், புறத் தூண்டல் இல்லாமல்
    ஆன்றோர் வகுத்த விதி.

    சி. ஜெயபாரதன்

  2. தோன்றாது எதுவும், புறத் தூண்டல் இல்லாது
    சான்றோன் நியூட்டன் விதி.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.