வெண்கொக்கின் வித்தியாசமான வேட்டை

சில திரைப்படங்களில் வில்லன் வித்தியாசமாக ஏதேனும் செய்துகொண்டே ஆளைப் போட்டுத் தள்ளுவார், பார்த்திருக்கிறீர்களா? அதே போன்ற ஒரு சம்பவம்.
தாம்பரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தேன். ஏதாவது நல்ல காட்சி சிக்குமா எனச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். மதிலில் தனியே நின்றிருந்த ஒரு பெரிய வெண்கொக்கைப் படம் பிடிக்கத் தொடங்கினேன். முதலில் அது நடந்தது. பிறகு வித்தியாசமான நடனம் ஆடிக்கொண்டே சென்று இரையை லபக் எனப் பிடித்தது. இந்த அரிய காட்சியைத் தற்செயலாகப் படம் பிடித்தேன். அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமலே இதைப் பதிவு செய்தேன். செம்மையான அந்தக் காட்சி இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)